என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

பொடுகுத் தொல்லையைத் தவிர்க்க...

#Avaludan
பிரீமியம் ஸ்டோரி
News
#Avaludan

#Avaludan

பொடுகுத் தொல்லையைக் குறைக்கவும் தவிர்க்கவும் வீட்டிலேயே செய்யக்கூடிய பராமரிப்பு முறைகள் ப்ளீஸ் என, அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் நம் வாசகிகளிடம் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த டிப்ஸ் இங்கே...

Siva Shankari T

250 மில்லி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி இறக்கவும். அதில் 25 கிராம் ஓமம் சேர்த்து மூடிவைக்கவும். எண்ணெய் சூடு தணிந்ததும் பயன்படுத்த ஆரம்பிக்கவும். ஓமத்தை வடிகட்டத் தேவையில்லை. இதைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வரும்போது பொடுகுத் தொல்லை தீர்வதுடன் கேச வளர்ச்சியும் தூண்டப்பட்டு கேசம் பொலிவு பெறும்.

Iswarya Azhagu Pragash

தேவையான அளவு தயிர், எலுமிச்சை சாறு இவற்றுடன் சிறிது வெந்தயப் பொடி சேர்த்து நன்றாகக் கலந்து தலைமுடியில் தடவி 20 நிமிடங்களில் அலசவும். இரண்டாவது முறையிலேயே பொடுகு குறையத் தொடங்கிவிடும்.

Shenba Bala Chandran

பொடுதலை இலையை அரைத்து, சம அளவு நல்லெண்ணெயுடன் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். தலைக்குக் குளிக்கும்போது, அரை மணி நேரத்துக்கு முன்னர் இந்த எண்ணெயைத் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கவும்.

Muthulakshmi Prabu

வேப்பிலை, சின்ன வெங்காயம், ஊறவைத்த வெந்தயம் இவற்றை தேவையான அளவு எடுத்து, சேர்த்து அரைத்து, தலைமுடியில் நன்கு தடவி, 20 நிமிடங்கள் கழித்து அலசவும்.

பொடுகுத் தொல்லையைத் தவிர்க்க...

Kaji Shankari, Sri Devi

எலுமிச்சைச்சாற்றைத் தலை முழுக்கத் தடவி

20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். பொடுகு குறையத் தொடங்கும். பயன்படுத்தும் சீப்பையும் சீரான இடைவெளியில் சுத்தப்படுத்தவும். அதேபோல, தலையணை உறையையும்

சுத்தமாகப் பராமரிக்கவும்.

Srividhya Prasath

ஊறவைத்த வெந்தயம் மற்றும் பெரிய நெல்லிக்காய் சேர்த்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பயத்தம்மாவால் தலையை அலசவும்.

Subha C Mani, San Geetha

உடல் வறட்சியாலும் பொடுகு ஏற்படலாம் என்பதால் தண்ணீர் நிறைய அருந்தவும்.

ப்ரியா ஹேம்ரிஷ்

சிலருக்கு ஏற்கெனவே தலை எண்ணெய்ப் பிசுபிசுப்புடன் இருக்கும். அவர்கள் தினமும் எண்ணெய் தேய்ப்பதை தவிர்த்து, ஒருநாள் விட்டு ஒருநாள் தேய்ப்பதன் மூலம் தலையில் அழுக்குப் படிவதையும், அதனால் பொடுகுத் தொல்லை ஏற்படுவதையும் தவிர்க்கலாம். அதேபோல இவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்க வேண்டியதும் அவசியம்.

Gomathi Sivayam

ஷாம்பூவை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது மற்றும் சரியாக அலசாமல் விடுவதும் பொடுகுக்கான காரணமாகலாம். எனவே, தரமான ஷாம்பூவை தேர்ந்தெடுத்து, அதை நேரடியாகக் தலையில் தேய்க்காமல் தண்ணீரில் கலந்து அதன் அடர்வைக் குறைத்த பின்னரே பயன்படுத்தவும். அதேபோல, ஷாம்பூ தலை முடியிலிருந்து முழுவதும் நீங்கும் வரையில் நன்றாகத் தேய்த்து தண்ணீரால் அலசிவிடவும்.

Latha Rajkumar

பாலில் இரண்டு டீஸ்பூன் வெள்ளை மிளகை ஊறவைத்து, அரைத்து, தலையில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் பயன்படுத்திக் குளிக்கவும்.

Rekha ShenthilKumar

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஓர் இரவு முழுக்க ஊறவைத்து, அதனுடன் ஒரு கைப்பிடி துளசி இலைகளைச் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்க நல்ல பலன் கிடைக்கும்.

Jeyadivya Devadas

முட்டையின் வெள்ளைக் கருவை வாரம் இருமுறை ஸ்கால்ப்பில் தடவி அலசி வரலாம்.

Sudarvizhi Sankar, Saranya Krishnan

கற்றாழை ஜெல்லை எடுத்து, தலைமுடி முழுக்கத் தடவி, 20 நிமிடங்களில் தலையை நன்கு அலசலாம்.