Published:Updated:

முடியை வெட்டினால் மறையுமா டிப்ரெஷன்?

டிப்ரெஷன்
பிரீமியம் ஸ்டோரி
டிப்ரெஷன்

முடி வெட்டிக்கொள்வது, ஹேர்ஸ்டைல் மாற்றிக்கொள்வதன் மூலம் சிலருக்கு ‘இன்ஸ்டன்ட்’ மனநிறைவு கிடைக்கும்.

முடியை வெட்டினால் மறையுமா டிப்ரெஷன்?

முடி வெட்டிக்கொள்வது, ஹேர்ஸ்டைல் மாற்றிக்கொள்வதன் மூலம் சிலருக்கு ‘இன்ஸ்டன்ட்’ மனநிறைவு கிடைக்கும்.

Published:Updated:
டிப்ரெஷன்
பிரீமியம் ஸ்டோரி
டிப்ரெஷன்

“டிப்ரெஷன் (மனச்சோர்வு), எதிர் மறை எண்ணங்கள் ஏற்பட்டால் உங்களில் எத்தனை பேர் தலைமுடியை வெட்டிக்கொள்வீர்கள் அல்லது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொள் வீர்கள்?” இப்படி ஒரு கேள்வியை புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியரும் பரதநாட்டியக் கலைஞருமான கவிதா ராமு ஐ.ஏ.எஸ், சமூக வலைதளத்தில் கேட்டிருந்தார். பெரும்பாலானவர்கள் அப்படிச் செய்வதாகத் தெரிவித் திருந்தனர். இதுபோன்ற செயல்கள் மனச்சோர்வை மாற்றுமா என்பதற்கு, பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, உளவியல் ஆலோசகர் சமிதா ஜெயின்.

சமிதா ஜெயின்
சமிதா ஜெயின்

“மனச்சோர்வும் எதிர்மறை எண் ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. எதிர்மறை எண்ணங்கள் உடையவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம். அதேபோல மனச்சோர்வு இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். சாதாரணமாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து முறை எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், மனச்சோர்வு உள்ளவருக்கு 15-20 முறை ஏற்படலாம்.

என் முடி என் உரிமை!

மனச்சோர்வையோ, எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதையோ ஒருவரால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், முடியை வெட்டிக்கொள்வது ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள செயல். அவர் நினைத்தால் வெட்டிக் கொள்ளலாம் என்பதால் ‘என் ஆளுகைக் குட்பட்ட விஷயங்களில் என் விருப்பப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் செயல் படுவேன்’ என்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

மனச்சோர்வு, எதிர்மறை எண்ணங் களால் பாதிக்கப்படும் சிலர், தங்களை கவனித்துக்கொள்ள மாட்டார்கள். அந்த நிலையில் தலைமுடியைப் பராமரிப்பது கூடுதல் சிரமமாக இருக்கும் என்பதாலும் முடி வெட்டிக் கொள்வார்கள். சோர்வான மனநிலை மாறி புத்துணர்ச்சி கிடைப்பதற் காக ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வது, ஹேர் கலர் செய்வது போன்றவற்றைச் செய்வார்கள். இவர்களுக்கு மனச்சோர்வு போன்ற பெரிய பிரச்னைகள் இருக்க வாய்ப்பில்லை.

முடியை வெட்டினால் மறையுமா
டிப்ரெஷன்?

ஐஸ்க்ரீம், பார்லர், ஷாப்பிங்...

ஐஸ்க்ரீம், நொறுக்குத் தீனிகளை அதிகமாகச் சாப்பிடுவது, சுற்றுப்பயணம் மேற்கொள்வது, பியூட்டி பார்லருக்குச் சென்று ஃபேஷியல், பெடிக்யூர், மெனிக்யூர் செய்துகொள்வது, லாங் டிரைவ், ஷாப்பிங் இவையும் இந்தப் பட்டியலில் வரும். பொதுவாக இளம்வயதின ரிடையே இதுபோன்ற பழக்கங்கள் அதிகமாகக் காணப்படும்.

பாசிட்டிவ் எனர்ஜி!

முடி வெட்டிக்கொள்வது, ஹேர்ஸ்டைல் மாற்றிக்கொள்வதன் மூலம் சிலருக்கு ‘இன்ஸ்டன்ட்’ மனநிறைவு கிடைக்கும். வாழ்க் கையைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றி நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பாக அமையும். மூளையில் மகிழ்ச்சிக் கான ஹார்மோன்கள் உற்பத்தியாகும். எதிர் மறை எண்ணங்களில் மூழ்கியிருப்பவர்களின் கவனத்தைத் திருப்பி குறுகிய காலத்துக்கு நல்ல மனநிலையைக் கொடுக்கும். இத்தகைய செயல்கள் ஒரு வடிகால்தானே தவிர, பிரச் னையைக் குணப்படுத்தும் சிகிச்சை இல்லை.

எதுவரை அனுமதிக்கலாம்?

அன்றாட அடிப்படை செயல்களுக்கே சிரமப்படுகிறார்கள். ஆனால், முடிவெட்டிக் கொள்வது போன்ற செயல்களை மட்டும் அடிக்கடி செய்கிறார்கள் என்றால் அதை ஓர் எச்சரிக்கை மணியாகத்தான் பார்க்க வேண்டும். அதாவது வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள் முடி வெட்டிக் கொள்கிறார்கள் என்றால் அது இயல்பானது அல்ல. மேலும் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வது, வருத்திக்கொள்வது போன்ற நிலைக்குச் சென்றாலும் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். அதுபோன்ற நபரின் மீது உடனிருப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு சிகிச்சைகள் தேவைப்படலாம். இந்த எல்லைக்கு வராமல் முடிவெட்டிக்கொள் வதோ, முடியின் நிறத்தை மாற்றிக்கொள்வதோ, ஷாப்பிங் செய்வதோ சாதாரண விஷயம்தான்” என்கிறார் சமிதா ஜெயின்.

கவிதா ராமு
கவிதா ராமு

இனி நல்லதே நடக்கும்! - கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

“பொதுவாகவே நான் சோர்வாக உணரும்போது முடிவெட்டிக்கொள்வது அல்லது ஹேர்ஸ்டைல் மாற்றிக்கொள்வது போன்றவற்றைச் செய்வது வாடிக்கை. வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத எதிர்மறையான, எரிச்சலூட்டும் நிகழ்வுகளின்போது அந்தச் சூழலை நம்மால் மாற்ற முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் ஹேர்ஸ்லைடல் மாற்றுவது அல்லது முடிவெட்டிக்கொள்ளும்போது ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டதைப்போல் உணர்வேன். இனி நல்ல விஷயங்களே நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதுவும் வாங்காவிட்டாலும் கடைகளுக்குப் போய் சுற்றிப் பார்ப்பது, கடற்கரையில் ஒரு நடை போன்றவையும் என் மன அழுத்தத்தைப் போக்கும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism