Published:Updated:

பியூட்டி பார்லரில் ஹேர்வாஷ்... பக்கவாதத்துக்குக் காரணமாகுமா? மருத்துவர்கள் விளக்கம்

hair care

சம்பந்தப்பட்டவர்கள் உரிய பயிற்சி பெற்றவர்களா? நல்ல பொருள்களைப் பயன்படுத்திகிறார்களா என்பது பற்றியெல்லாம் நம்மில் பலர் சிந்திப்பதுகூட கிடையாது.

பியூட்டி பார்லரில் ஹேர்வாஷ்... பக்கவாதத்துக்குக் காரணமாகுமா? மருத்துவர்கள் விளக்கம்

சம்பந்தப்பட்டவர்கள் உரிய பயிற்சி பெற்றவர்களா? நல்ல பொருள்களைப் பயன்படுத்திகிறார்களா என்பது பற்றியெல்லாம் நம்மில் பலர் சிந்திப்பதுகூட கிடையாது.

Published:Updated:
hair care

பியூட்டி பார்லர்கள் செல்வது ஆண், பெண் இருவருக்கும் இப்போது இயல்பானதாக மாறிவிட்டது. அதற்கேற்ப பார்லர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. சில வாரங்கள் பயிற்சி பெற்று அழகுக்கலை நிபுணர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு, பார்லர்களை திறந்து விடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உரிய பயிற்சி பெற்றவர்களா? நல்ல பொருள்களைப் பயன்படுத்துகிறார்களா என்பது பற்றியெல்லாம் நம்மில் பலர் சிந்திப்பதுகூட கிடையாது. முறையாகப் பயிற்சி எடுத்துக்கொள்ளாத அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் பெண்களால் வாடிக்கையாளர்கள் பிரச்னைகளில் சிக்குவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன.

பியூட்டி பார்லர்
பியூட்டி பார்லர்
மாதிரிப்படம்

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள பார்லர் ஒன்றில் ஹேர்கட் செய்து ஹேர் வாஷ் செய்துள்ளார். அதன் பின் அந்தப் பெண்ணுக்கு வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த நாள், உடலில் ஒரு பகுதியில் லேசாக வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின், காலில் பேலன்ஸ் தவற ஆரம்பித்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண், நரம்பியல் மருத்துவரை அணுகியுள்ளார். 

மருத்துவரின் அறிவுரைப்படி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சில நாள்கள் முன், பியூட்டி பார்லரில் ஹேர் வாஷ் செய்தபோது சம்பந்தப்பட்டவரின் கழுத்துப்பகுதி, தலைப்பகுதியை அளவுக்கு அதிகமாக வளைத்ததன் விளைவாக இப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நிபுணர்களிடம் பேசினோம்...

கழுத்து வலி (Representational Image)
கழுத்து வலி (Representational Image)

சென்னையைச் சேர்ந்த காஸ்மெட்டிக் சர்ஜன் சசிக்குமார் முத்து:

``நரம்புகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது ரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம். ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்போது ஒருவருக்கு பக்கவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. பார்லர்களில் ஹேர் வாஷ் செய்யும்போது கழுத்தை நீண்டநேரம் பின்புறம் வளைத்து வைத்திருப்பார்கள். அதேபோல் தலைக்கு மசாஜ், கழுத்துக்கு மசாஜ் என்ற பெயரில் தலையில் அடிப்பது, நரம்புகளை அழுத்தித் தேய்த்து விடுவது போன்றவற்றைச் செய்வார்கள். இதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். இதன் விளைவாக உடனடியாக பக்கவாதம் வராது... ஆனால், கழுத்துவலி, தலைவலி, உடலின் ஒரு புறம் பலவீனம் அடைதல் போன்றவை நிகழலாம். இவை தொடர்ந்து நிகழ்ந்தால் பக்கவாதம் வரை கொண்டு செல்லும். கட்டணம் குறைவாக இருக்கிறதே என்பதற்காக பார்லர்கள், முடித்திருத்தும் கடைகள் போன்றவற்றில் மசாஜ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அவசியம் எனில் பயிற்சி பெற்ற பிசியோதெரபிஸ்ட்டுகளை அணுகுங்கள். பார்லர் சென்று வந்த பின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் தாமதம் இல்லாமல் மருத்துவரை அணுகுவதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்" என்றார். 

சென்னையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் கவிதா:

``பக்கவாதம் என்பது மரபணு கோளாறுகள், அதிகப்படியான மாத்திரைகள் உட்கொள்ளுதல், மன அழுத்தம் போன்ற காரணிகளால்தான் ஏற்படும். பார்லரில் ஹேர் வாஷ் செய்வது, மசாஜ் செய்வதால் இந்த அளவு தீவிரமான பாதிப்புகள் வர வாய்ப்புகள் மிகமிகக் குறைவே. பார்லரில் ஹேர் வாஷ் செய்யும் போது, பேசின் போன்ற ஒன்றில் நம்முடைய கழுத்துப்பகுதியை வைத்து ஹேர் வாஷ் செய்வார்கள். இதனால் பின் கழுத்துப் பகுதியில் லேசான வலி ஏற்படலாம். அடிக்கடி இப்படிச் செய்யும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் எலும்புத் தேய்மானம் ஏற்படலாம்.

பியூட்டி பார்லரில் ஹேர்வாஷ்... பக்கவாதத்துக்குக் காரணமாகுமா?  மருத்துவர்கள் விளக்கம்
மாதிரிப்படம்

நரம்புகள் பலவீனமடைந்து சிறிது நேரத்துக்கு கை, கால்கள் மரத்துப்போவது போன்ற உணர்வுகள் வரலாம். இது இயல்பானது தான். ஆனால், உடலைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இயல்பு இருக்கும். எனவே, கூடுதலான பாதிப்புகள் இருப்பது போன்ற உணர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது'' என்கிறார்.