Published:Updated:

கவனம் தேவை: தலையணை தந்திரம்

தலையணை
பிரீமியம் ஸ்டோரி
தலையணை

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

கவனம் தேவை: தலையணை தந்திரம்

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

Published:Updated:
தலையணை
பிரீமியம் ஸ்டோரி
தலையணை
கவனம் தேவை: தலையணை தந்திரம்

தூக்கம் என்பது சரும, கூந்தல் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அடிப்படை என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால், தூங்கும்போது நாம் பயன்படுத்தும் தலையணை உறைகூட அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமாகும் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? தலையணைக்கு சில்க், சாட்டின் மாதிரியான வழவழப்பான துணியாலான உறையைப் பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில்க் உறையானது சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் தடுக்கும். சில்க் துணிகளில் உராய்வுத் தன்மை குறைவு. சருமம் அந்தத் துணியின்மீது படும்போது அது சருமத்தை எந்த வகையிலும் உறுத்துவதில்லை.சாதாரண தலையணை உறையில் சருமம் படும்போது ஏற்படும் உராய்வால் சிறுசிறு சுருக்கங்கள் ஏற்படும். அது நாளடைவில் இன்னும் ஆழமாகி, நிரந்தரமாகும். சில்க் உறையில் இது தவிர்க்கப்படுகிறது.

இதே விஷயம் கூந்தலுக்கும் பொருந்தும்.

சில்க் உறையில் தலைவைத்துப் படுத்து உறங்கிவிட்டு, காலையில் எழுந்திருக்கும் போது முடி சிக்கு இன்றி பறந்து, வறண்டு காணப்படாது. சுருட்டை முடியுள்ள பெண்களுக்கு காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது கூந்தலானது கட்டுக்கடங்காமல் பறந்து, விரிந்திருப்பதுபோல உணர்வார்கள். அவர்களுக்கு சில்க் தலையணை உறை பேருதவியாக இருக்கும். கூந்தலிலுள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை, அழுக்கு போன்றவையும், சருமத்தில் தடவும் நைட் க்ரீம் போன்றவையும் சில்க் உறையில் படியாது. காட்டன் உறையில் படியும். அதனால் பாக்டீரியா தொற்று ஏற்படும்.

கவனம் தேவை: தலையணை தந்திரம்

சில்க் உறை போடப்பட்ட தலையணையில் படுத்து உறங்கும்போது சருமம் மற்றும் கூந்தலின் இயற்கையான நீர்ச்சத்தும் தக்கவைக்கப்படும். இதனால் சருமம் மற்றும் கூந்தலின் வறட்சி தவிர்க்கப்படும்.

காட்டன் தலையணை பயன்படுத்துவோரைவிட, சில்க் தலையணை உறை பயன்படுத்துவோருக்கு பருக்கள் வருவதும் பரவுவதும் தவிர்க்கப்படும்.