Published:Updated:

உடல்நலன் தொடர்பான உங்கள் கேள்விகள்; வழிகாட்டும் நிபுணர்கள் பதில்கள்! - புதிய பகுதி #DoctorVikatan

வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

கோவிட் தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்த நேரம்... நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு பக்கமும், கொத்துக்கொத்தான மரணங்கள் இன்னொரு பக்கமுமாக மக்கள் பீதியில், பதற்றத்தில் இருந்தனர். வதந்திகளால் மிரண்டுபோயிருந்த அவர்களது பயத்தைப் போக்க, நோய்த்தொற்று குறித்த சரியான தகவல்களைக் கொண்டுசேர்க்க `Covid Questions' என்ற பகுதியை விகடன் இணையதளத்தில் ஆரம்பித்தோம்.

Covid Questions
Covid Questions
AP Illustration/Peter Hamlin

கோவிட் தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து தெளிவான விளக்கங்களைப் பெற்றுத் தரும் `கோவிட் கொஸ்டீன்ஸ்' பகுதி, 150 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் வாசகர்களின் சந்தேகங்கள் ஓய்ந்தபாடாக இல்லை.

தொடக்கத்தில் கோவிட் தொடர்பாக மட்டும் கேள்வி கேட்ட வாசகர்கள், தற்போது உடல் ஆரோக்கியம் தொடர்பான மற்ற சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் கேட்கத் தொடங்கி யிருக்கிறார்கள் வாசகர்கள். இனி அதற்கும் நாங்கள் ரெடி!

ஆம், இனிமேல் கோவிட் தொடர்பாக மட்டுமல்ல; உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும், வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Image by Julio César Velásquez Mejía from Pixabay

இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

என்ன... ஆரம்பிப்போமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு