வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் ‘வெள்ளந்தி’யாகப் பேசும் ‘மேனகா கார்ட்ஸ்’ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் எஸ்.சங்கரலிங்கத்துக்கு இப்போது 69 வயது. என்றாலும், ஓர் இளைஞனுக்குரிய உற்சாகத்துடன் செயல்படுகிறார். தன்னுடைய உடல்நலத்துக்காக அவர் பின்பற்றும் நடைமுறைகள்குறித்துச் சொல்கிறார் இங்கே...

குடும்பம்

எனக்குப் பூர்வீகம் நாங்குநேரி. கோவையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்சி படித்தேன். சினிமா பிடிக்கும். இரண்டு படங்களில் நடித்தேன். பிறகு அச்சகத்தைத் தொடங்கினேன். திருமணம், வாழ்க்கையை இன்னும் பொறுப்புள்ளதாக்கியது. மனைவி இல்லத்தரசி. எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணம் முடிந்து பேரன், பேத்திகளையும் கண்டுவிட்டேன்.

உடல் பலம், மன பலம்

அடிப்படையில் நான் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்துக்காரன். சிறு வயதில் வாலிபால் ரொம்பப் பிடிக்கும். நான் ஒரு ஓட்டப்பந்தய வீரனும்கூட. அன்று ஓடியாடி உழைத்ததன் பலன், இப்போது வரை என் உடல் ‘சிக்’கென்று இருக்கிறது. இப்போதும் வாக்கிங் செல்லத் தவறுவதில்லை. இடையில் உடலை மதிக்காமல் விட்டேன்; இப்போது அதற்குத் தர வேண்டிய மரியாதையைத் தருகிறேன். உடல்பலம் எனக்கு இயல்பிலேயே இருந்தாலும், மனபலம்தான் என்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிறது.

காலை எழுந்ததுமே போன்!

காலை எழுந்ததுமே டீம் லீடர்களுக்கு போன் செய்து, அன்றைய வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்வேன். பிறகு கொஞ்சம் நடை. அடுத்து, குளியல். நேரமிருந்தால் சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவேன்; இல்லையென்றால், நேராக அலுவலகத்துக்கு அல்லது தொழிற்சாலைக்குப் போய்விடுவேன். இரவு 9 மணிக்கு வீடு. எல்லோரோடும் சிறிது நேரம் பேசிவிட்டுத் தூக்கம்.

எனக்கு எப்போதுமே ‘ஞாயிறு விடுமுறை இல்லை.’ எல்லாவற்றுக்கும் தினசரி நேரம் ஒதுக்கிடுவேன்!

ஆட்டுக்கறிக்கு `நோ’...

முடிந்தவரை ஆட்டுக்கறி, முட்டை மஞ்சள் கரு, சாயம் சேர்க்கப்பட்ட உணவுகளுக்கு ‘நோ’ சொல்லிவிடுவேன். மீன் வகை உணவுகளை விரும்பிச் சாப்பிடுவேன். சாப்பாட்டிலுள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லியைக்கூட விட்டுவைக்காமல் எல்லாக் காய்கறிகளையும் விரும்பிச் சாப்பிடுவேன்.

ஞாயிறு விடுமுறை இல்லை!

எனக்கு எப்போதுமே ‘ஞாயிறு விடுமுறை இல்லை.’ ஓய்வு, உழைப்பு, ஆரோக்கியம், ரிலாக்சேஷன் என எல்லாவற்றுக்கும் தினசரி நேரம் ஒதுக்கிவிடுவேன். இவற்றுக்காகத் தனியாக ஒரு நாளை ஒதுக்குவதில்லை. நான் எப்போதுமே ஜாலி டைப். என் நண்பர்கள் சிலர், ‘எப்போ போனை எடுத்தாலும் சிரிச்சுகிட்டேதான் பேசுறே... உன் ஹேப்பினஸ் சீக்ரெட் என்ன?’ என்று கேட்பார்கள். ‘ரகசியம்னு எதுவும் என்கிட்ட இல்லை. அதான் மகிழ்ச்சியா இருக்கேன்’ என்பேன்!

உடல் தொந்தரவுகள்!

40 வயதைக் கடந்தபோது மூட்டுகளில் வலி வரத் தொடங்கியது. அந்த நேரம் அச்சுகளுக்குச் செல்ல வேண்டியவற்றைப் படுக்கையிலேயே திருத்தம் செய்தேன். உடல்வலியைக் காட்டி, என் வேலையிலிருந்து நான் விடுபட நினைக்கவில்லை. நிறைய மருத்துவம் செய்தும் பலனில்லாமல் போக, டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்திதான் என்னை முழுமையாக குணப்படுத்தினார்.

நண்பர்களே எனர்ஜி!

எனது ஆரம்ப காலத்திலிருந்து கூடவே வரும் நண்பர்கள்தான் எப்போதும் எனக்கு எனர்ஜி தருபவர்கள். சிறு வயதில் என்னைப் பகுதி நேரமாகத் தனது சிந்தாமணி அச்சகத்தில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டவர் கோவை ஞானமூர்த்தி. வணிக ஒழுக்கங்களை எனக்குக் கற்றுத் தந்தவர். நண்பர் முருகானந்தம் வேலை கொடுத்து அரவணைத்தார். ‘உங்களுக்குக் கைம்மாறாக என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டேன். ‘வேலை கேட்டு வருகிறவர்களுக்கு உணவு, இடம், ஊதியம் தந்து அரவணைக்க வேண்டும்’ என்றார். அதை இன்றுவரை செய்கிறேன். ஆலோசனை கூறும் அன்பான நண்பர் ‘பொன்ப்யூர்’ பொன்னுசாமி, இக்கட்டான சூழலில் பண உதவி செய்தார். அவர் பெயரையே என் இளைய மகனுக்குச் சூட்டினேன். இப்படி நல்ல நண்பர்களைச் சம்பாதித்தது என் வாழ்க்கைப்பேறு!