Published:Updated:

கல்லீரலில் பிரச்னையா? இந்த மாதத்தை தவறவிடாதீங்க... `கல்லீரலைக் காப்போம்' உங்களுக்கான நிகழ்ச்சிதான்!

இலவச கல்லீரல் பரிசோதனை மற்றும் இந்த மாதம் முழுக்க இலவச கல்லீரல் ஆலோசனை முகாம்கள் நடத்துவது ஆகிய இரண்டும்தான் இந்தக் கல்லீரல் விழிப்புணர்வு நிகழ்வின் முக்கிய நோக்கங்களாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனித உடலின் உள் உறுப்புகளில் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமான கல்லீரலின் ஆரோக்கியம் அது சந்திக்கிற பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் உட்பட கல்லீரல் தொடர்பான ஏ டு இசட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கடந்த வியாழன் அன்று சென்னயில் தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த நிகழ்வு 'சென்னை லிவர் ஃபவுண்டேஷன்' என்கிற அமைப்பின் முயற்சியில் நடந்தது.

"அக்டோபர் மாதம் முழுக்கவே கல்லீரல் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படவிருக்கிறது. அதன்படி அடுத்தடுத்த நாள்களில் மஞ்சள் காமாலை விழிப்புணர்வு, கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் சிரோசிஸ் அதாவது கல்லீரல் சுருக்க விழிப்புணர்வுன்னு ஒவ்வொரு நிகழ்வா நடக்க இருக்கு" என்கிறார்கள் சென்னை லிவர் ஃபவுண்டேஷன் அமைப்பினர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முன்னதாக தொடக்க நிகழ்வில் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கல்லீரலைக் காக்க நாங்கள், அதாவது அரசு, உங்களுடன் இணைகிறோம். மக்களாகிய நீங்கள் அரசுடன் இணைய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சென்னை லிவர் ஃபவுண்டேஷன் தலைவர் ஆர்.பி.சண்முகம், மருத்துவர் விவேகானந்தன், மெட் ஆல் நிறுவன தலைமை அதிகாரி அர்ஜுன் ஆனந்தன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

50,000 பேருக்கு இலவச கல்லீரல் பரிசோதனை மற்றும் இந்த மாதம் முழுக்க இலவச கல்லீரல் ஆலோசனை முகாம்கள் நடத்துவது ஆகிய இரண்டும்தான் இந்தக் கல்லீரல் விழிப்புணர்வு நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு