மழைக்காலம் வரும்போது மனமும் உடலும் மந்தமாவது இயற்கையே. எந்த வேலையும் செய்யத் தோன்றாமல் இருக்க நினைப்பதுபோலவே, அழகுப் பராமரிப்பிலும் அக்கறை காட்டத் தோன்றாது. ஆனால், மழை நாள்களுக்கென பிரத்யேக சருமப் பராமரிப்பு அவசியம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.

மழைக்கால மேகம் சூழ்ந்தாலும் சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்கம் உங்களை நோக்கிப் பாயும் என்பதை மறக்காதீர்கள். எனவே, வெயில் நாள்களைப் போலவே இந்த நாள்களிலும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க மறக்காதீர்கள்.

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை முகம் கழுவுங்கள். அப்போதுதான் சருமத்தின் அதிகப்படியான எண்ணெயும் பிசுபிசுப்பும் நீங்கும். தினமும் கிளென்சிங், டோனிங், மாயிஸ்சரைசிங் செய்யத் தவறாதீர்கள்.

சரும ஆரோக்கியத்தில் தண்ணீரின் பங்கு மகத்தானது. மழைக்காலத்தில் அவ்வளவாக தாகம் எடுக்காது என்பதால் தண்ணீர் அருந்த மறக்காதீர்கள். ரிமைண்டர் வைத்துக்கொண்டாவது ஒரு மணி நேரத்துக்கொரு முறை வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள். சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறவைத்த நீர் இன்னும் சிறப்பானது.

மழை நாள்களில் சருமம் அதிகம் வறண்டு போகும். குளித்து முடித்ததும் அந்த ஈரம் லேசாக இருக்கும்போதே தரமான மாயிஸ்சரைசர் உபயோகிப்பது, பல மணி நேரத்துக்குச் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.

தேவையில்லாத நேரத்தில் மேக்கப்பைத் தவிர்க்கவும். மழைக்கு இதமாகச் சூடாக பஜ்ஜி, போண்டா என எதையாவது கொறிக்கத் தோன்றும்தான். ஆனால், அவை சரும ஆரோக்கியத்துக்கு நல்ல உணவுகள் அல்ல. பருக்கள் வரலாம். எனவே, ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளைத் தேர்ந்தெடுங்கள்.