Published:Updated:

`ஊரடங்கால் கேரளாவில் குறைந்துவரும் மாரடைப்பு..!’ - என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்?

மாரடைப்பு
மாரடைப்பு

இதய நோயாளிகளுக்கு, தீவிரமான உடல் உழைப்பின்போதும் கார் ஓட்டும்போதுமே மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால், தற்போது உடலுழைப்பு குறைந்துள்ளதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் ஊராடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, கேரளத்தில் 30 முதல் 50 சதவிகிதம் வரை மாரடைப்பு குறைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Corona
Corona
pixabay

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஊரடங்கில் மாசு மற்றும் மனஅழுத்தம் குறைந்துள்ளது இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று அம்மாநில இதயநோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில இதயநோய் மருத்துவர்கள், "இதய நோயாளிகளுக்கு, தீவிரமான உடல் உழைப்பின்போதும் கார் ஓட்டும்போதுமே மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால், தற்போது இதய நோயாளிகளுக்கும் உடலுழைப்பு குறைந்துள்ளதால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளன.

மாரடைப்பு
மாரடைப்பு

இருப்பினும், நாடு முழுவதும் மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கான உறுதியான காரணத்தை யாராலும் கூறமுடியாது.

மக்கள் தற்போது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்குத் திரும்பியுள்ளதும், துரித உணவுகளின் நுகர்வைக் குறைத்துள்ளதும் மாரடைப்பு குறைந்துள்ளதற்குக் காரணமாக இருக்கலாம். நோயாளிகள், சரியான நேரத்தில் உண்ணவும் உறங்கவும் செய்வதுடன், குறித்த நேரத்தில் மருந்துகளும் எடுத்துக்கொள்கின்றனர்" என்றும் தெரிவிக்கின்றனர்.

கொரோனா யுத்தம்: பிரதமர் மோடி முதலிடம்!- `மார்னிங் கன்சல்ட்' கருத்துக்கணிப்பு... மக்கள் கருத்து என்ன?

மற்றொருபுறம், ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு போக்குவரத்து இல்லாதது, மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் காரணமாகவும் அறிகுறிகள் ஏற்பட்டும் மருத்துவமனை செல்லாமல் தவிர்ப்பவர்களும் இருக்கலாம் என்கின்றனர்.

மாரடைப்பு
மாரடைப்பு

ஆனால், ஊரடங்கு முடிந்ததும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இதயநோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். "ஊரடங்கு காலத்தில் மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறிகளை மக்கள் பெருமளவில் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. அதனால் பின்னாள்களில் இதயச் செயலிழப்பு ஏற்படலாம்" என்று எச்சரிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு