Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 26 - ஹைப்பர் டென்ஷன்... அறிகுறிகளில் வேண்டாம் அலட்சியம்!

ஹைப்பர் டென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
ஹைப்பர் டென்ஷன்

ஆரம்ப நிலை என்றால் அடிக்கடி கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், மூக்கில் ரத்தக்கசிவு ஆகிய அறிகுறிகள் தோன்றலாம்

செக் ஃப்ரம் ஹோம் - 26 - ஹைப்பர் டென்ஷன்... அறிகுறிகளில் வேண்டாம் அலட்சியம்!

ஆரம்ப நிலை என்றால் அடிக்கடி கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், மூக்கில் ரத்தக்கசிவு ஆகிய அறிகுறிகள் தோன்றலாம்

Published:Updated:
ஹைப்பர் டென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
ஹைப்பர் டென்ஷன்

ரத்தக் கொதிப்பு, பிபி என்றெல்லாம் அழைக்கப்படும் உயர் ரத்த அழுத்தம் (Hypertension) உலக அளவில் நான்கில் ஓர் ஆணுக்கும் ஐந்தில் ஒரு பெண்ணுக்கும் இருக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் நோய் களில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று.

ரத்த ஓட்டத்தின்போது ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவரில் அழுத்தம் உருவாகும். அந்த அழுத்தம் தேவைக்கு அதிகமாகும்போது அது உயர் ரத்த அழுத்தம் (Hyperension) எனப்படுகிறது. அறிகுறிகள் பெரும் பாலும் வெளியே தெரியாது என்பதால், இது ‘சைலன்ட் டிசீஸ்’ (Silent Disease) என்றும் கூறப்படுகிறது.

வைபவ் சுரேஷ்
வைபவ் சுரேஷ்

யாருக்கெல்லாம் வரலாம்?

குடும்பப் பின்னணியில் யாருக் கேனும் இருந்தால்

வயது மூப்பு

உடல் பருமன்

அளவுக்கு அதிகமான உப்பு பயன் பாடு

மது, புகைப்பழக்கம்

மன அழுத்தம்

சர்க்கரைநோய், கொலஸ்ட்ரால்

கர்ப்ப காலம்

பல ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியாமலே இருக்கும்போது அது நாள்பட்ட உயர் ரத்த அழுத்தமாக (Chronic Hypertension) மாறி உடலுறுப்புகளை பாதிக்கத் தொடங்கும். சில நேரங்களில் கல்லீரல், கண், இதயம், சிறுநீரகம், மூளை உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட பிறகு தான் அறிகுறிகளே வெளியே தெரியும்.

அறிகுறிகள்

ஆரம்ப நிலை என்றால் அடிக்கடி கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், மூக்கில் ரத்தக்கசிவு ஆகிய அறிகுறிகள் தோன்றலாம். நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம் என்றால் பார்வை மங்குதல், சிறுநீர் வெளியேற்றுவதில் பிரச்னை, உடல் பலவீனம், கை, கால் விரல்கள் மரத்துப்போன உணர்வு, நெஞ்சுவலி, மூச்சுத்திறணல், படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

சுய பரிசோதனை

`ஸ்ஃபக்மோமொனாமீட்டர்' (Sphygmomanometer) எனப்படும் பிபி பரிசோதிக்கும் டிஜிட்டல் கருவியை வீட்டில் வாங்கி வைத்துப் பரிசோதிக்கலாம். அந்தக் கருவியில் `சிஸ்டாலிக்' (Systolic), `டயஸ்டாலிக்' (Diastolic) என்ற இரண்டு அளவீடுகள் இருக்கும். ‘சிஸ்டாலிக்’ என்பது இதயத்துடிப்பின்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிப்பது. ‘டயஸ்டாலிக்’ என்பது இதயத் துடிப்புக்கு இடையே ஏற்படும் அழுத்தத்தைக் குறிப்பது. சிஸ்டாலிக் 120 முதல் 140, டயஸ்டாலிக் 80 முதல் 90 வரை இருந்தால் இயல்பானது. இந்த அளவுக்கு மேலே சென்றால் உயர் ரத்த அழுத்தம். இந்த அளவுக்கு கீழே சென்றால் குறைந்த ரத்த அழுத்தம்.

செக் ஃப்ரம் ஹோம் - 26 - ஹைப்பர் டென்ஷன்... அறிகுறிகளில் வேண்டாம் அலட்சியம்!

உடற்பயிற்சிக்குப் பிறகு, வெளியில் சென்று வந்தபிறகு, பதற்றம், கோபமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடாது. சற்று ரிலாக்ஸ்டாக இருக்கும்போது பரிசோதித்தால்தான் சரியான முடிவு தெரியும்.

உயர் ரத்த அழுத்தம் உறுதியானால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி போன்ற வற்றைப் பின்பற்றினால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாத்திரையின் அளவைக் குறைத்துவிடலாம்.

ஆரோக்கியமானவர்கள், நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் 35 வயதிலிருந்து அவ்வப்போது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள லாம். நோய் பாதிக்கும் வாய்ப்புள்ளவர்கள், அறிகுறிகள் உள்ளவர்கள் 30 வயதிலிருந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குறைந்த ரத்த அழுத்தம் என்று நினைத்துக்கொண்டு உப்பு அதிகம் போட்டு மோர் குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால் ஏற்கெனவே இருக்கும் உயர் ரத்த அழுத்தம் மேலும் அதிகரித்துவிடும். எனவே, அறிகுறிகள் தென்பட்டால் உரிய பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

அடுத்த இதழில் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) பற்றிப் பார்க்கலாம்.

தகவல்: வைபவ் சுரேஷ், பொது மருத்துவர், சென்னை