Published:Updated:

3 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி! காரணம் அறிய மருத்துவமனையில் நடந்த விசாரணை...

ஹெச்.ஐ.வி

ரத்த வங்கிக்கு அவர்கள் வரவில்லை என்று கூறும் மாதங்களில்கூட நோயாளி அதே ரத்த வங்கியில் மருத்துவரைச் சந்தித்ததற்கான ஆதாரம் குறிப்பேட்டில் உள்ளது.

3 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி! காரணம் அறிய மருத்துவமனையில் நடந்த விசாரணை...

ரத்த வங்கிக்கு அவர்கள் வரவில்லை என்று கூறும் மாதங்களில்கூட நோயாளி அதே ரத்த வங்கியில் மருத்துவரைச் சந்தித்ததற்கான ஆதாரம் குறிப்பேட்டில் உள்ளது.

Published:Updated:
ஹெச்.ஐ.வி

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ராம்பள்ளி கிராமத்தில் கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் சிவா, இவருடைய 3 வயது மகன் `தலசீமியா' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறந்த ஏழு மாதங்களிலிருந்தே இந்தக் குழந்தைக்கு நோய்கான சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அத்துடன் 15 நாள்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்றி வந்துள்ளனர்.

Infection
Infection
Pixabay

தன் மகனை, இந்திய செஞ்சிலுவை சங்கத்தால் நடத்தப்படும் ரத்த வங்கிக்கு, 15 நாள்களுக்கு ஒருமுறை ரத்தம் ஏற்றுவதற்காக அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் “ஜூலை 20 ஆம் தேதி, சிவா தன் மகனுக்கு ரத்தம் ஏற்றுவதற்காக அந்த மையத்திற்கு அழைத்து வந்துள்ளார். சோதனை செய்த ​​ரத்த வங்கியைச் சேர்ந்தவர்கள், அவரிடம் ஓர் அறிக்கையைக் கொடுத்தனர். அதில் அவரின் 3 வயது மகனுக்கு ஹெச்.ஐ.வி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த சிவா, இதை நம்பாமல் கூடுதலாக இரண்டு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இரண்டு சோதனை மையங்களிலும் ஒரே முடிவுதான் வந்தது. அவற்றிலும் அந்தக் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் சிவாவுக்கும் அவரின் மனைவிக்கும் செய்த ஹெச்.ஐ.வி பரிசோதனையில் நெகட்டிவ் என்றே வந்தது, மகனின் நிலை, அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரத்த வங்கி மீது நல்லகுண்டா காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதில்,

தங்கள் குழந்தைக்கு ரத்தம் செலுத்துவதற்காக ரத்த வங்கிக்குத் தவறாமல் சென்று வருவதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுவதாகவும், ரத்தவங்கியின் அலட்சியத்தால் குழந்தைக்கு இந்த பாதிப்பு வந்துள்ளதாவும் குறிப்பிட்டிருந்தனர்.

ஹெச்.ஐ.வி
ஹெச்.ஐ.வி

இதனைத் தொடர்ந்து போலீசார் ரத்த வங்கியில் விசாரணை செய்தபோது மருத்துவர்கள் கூறியதாவது,

கடந்த மூன்று ஆண்டுகளில் நோயாளி சில மாதங்கள் வராமல் தவறவிட்டுள்ளனர். ரத்தம் ஏற்றுவதற்காக வேறு இடத்திற்குச் சென்றுள்ளனர். அதனால் வேறு எங்கிருந்தும் ஹெச்.ஐ.வி தொற்றியிருக்கலாம்.

ரத்ததானம் செய்ய வருபவர்களிடம் அனைத்து சோதனைகளையும் செய்து, எந்த நோயும் இல்லை என்பதை உறுதிபடுத்திய பின்னர்தான், நாங்கள் ரத்தத்தை சேகரித்து வைப்போம்.

ரத்த தானம் செய்தவர்கள் அனைவரின் விவரங்கள் குறித்த பதிவுகள் எங்களிடம் உள்ளன. இவர்கள் குறிப்பிட்ட கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் 10 மாதங்களில் ரத்த தானம் செய்த ஒவ்வொரு நன்கொடையாளரையும் ரத்தப் பரிசோதனைக்காக வரவழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றனர்.

மருத்துவர்கள் கூறியதை முற்றிலும் மறுத்துள்ள குழந்தையின் தந்தை சிவா, ரத்த வங்கிக்குச் சென்ற எல்லா நேரங்களையும், தேதி மற்றும் மருத்துவரின் கையொப்பத்துடன் பதிவுசெய்துள்ளார். இதை ஆதாரமாக காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஒவ்வொரு மருத்துவமனை வருகையின் தேதிகளையும், அவரின் மகனின் ஹீமோகுளோபின் அளவு, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவரின் கையொப்பம் ஆகியவற்றைக் காட்டும் பதிவுகள் சிவாவிடம் உள்ளன.

ரத்த வங்கிக்கு அவர்கள் வரவில்லை என்று கூறும் மாதங்களில்கூட நோயாளி அதே ரத்த வங்கியில் மருத்துவரைச் சந்தித்ததற்கான ஆதாரம் குறிப்பேட்டில் உள்ளது.

விசாரணை
விசாரணை

இந்திய செஞ்சிலுவை சங்கம் நடத்தும் இந்த ரத்த வங்கிக்கு எதிராக, பிரிவு 338 (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை நல்லகுண்டா சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் விசாரித்து வருகிறார்.

ரத்ததானம் செய்த நன்கொடையாளர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும், மேலும் அனைத்துப் பதிவுகளையும் தரும்படி ரத்த வங்கியிடம் காவல்துறை கேட்டுள்ளது. இது மருத்துவ வழக்கு என்பதால், மருத்துவ வாரியத்தின் ஆலோசனைகளையும் கேட்டு போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

மூன்று வயது குழந்தைக்கு நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.