Published:Updated:

`உங்கள் திறமையை உதாசீனப்படுத்துபவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?' #NoMoreStress

கிராபியென் ப்ளாக்

ஒரு செயலை பலனுக்காக செய்கிறோமா அல்லது உயரிய நோக்கத்துக்காக செய்கிறோமா என்பதைப் புரிந்துகொண்டு செய்தாலே மனஅழுத்தத்தை விரட்டியடிக்க முடியும். புகழ், பணம் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு வேலைசெய்யும்போது அது சில நேரங்களில் கிடைக்காமல் போகலாம். அதனால் மனஅழுத்தம் ஏற்படலாம்.

stress
stress ( pixabay )

``நான் சந்திக்கும் மனிதர்களிடம் என் திறமையை வெளிப்படுத்தும்போது உதாசீனப்படுத்துகிறார்கள். இதனால் எனக்கு ஒருவித மன அழுத்தம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?" என்று வாசகர் ஒருவர் Mentalhealth@vikatan.com மின்னஞ்சல் வழியாகக் கேட்டிருந்தார் வாசகரின் இந்தக் கேள்வியை மனநல மருத்துவர் வெங்கடேஷ்வரனிடம் முன்வைத்தோம்.

Stress
Stress
pixabay

``மனிதர்களில் சில பேருக்கு `சோஷியல் அப்ரூவல் சீக்கிங்’ (Social approval seeking) இருக்கும். தான் செய்வது சரியா.. தவறா என்று பிறரிடம் கருத்துக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்படியாக பிறரிடம் கேட்கும்போது அவர்களின் திறமைகளை குறைத்துச் சொல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆகவே, ஏதாவது ஒரு செயலை நீங்கள் செய்யும்போது அதுகுறித்து மற்றவர்களிடம் கருத்து கேட்பதை நிறுத்துங்கள்.

ஒரு வேலையை சரியாகவும் திருத்தமாகவும் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது, அது குறித்து யார் என்ன சொன்னாலும் கவலைப்படமாட்டீர்கள். அதனால், உங்களுக்கு மன அழுத்தமும் ஏற்படாது!
மனநல மருத்துவர் வெங்கேடஷ்வரன்

`இந்தச் செயலை நான் சரியாகத்தான் செய்வேன்’ என்று நீங்கள் மனதில் உறுதி எடுத்துக்கொண்டு வேலையை தன்னம்பிக்கையோடு செய்யுங்கள்.

Stress
Stress
pixabay.com

ஒரு செயலை பலனுக்காக செய்கிறோமா அல்லது உயரிய நோக்கத்துக்காக செய்கிறோமா என்பதைப் புரிந்துகொண்டு செய்தாலே மனஅழுத்தத்தை விரட்டியடிக்க முடியும். புகழ், பணம் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு வேலைசெய்யும்போது அது சில நேரங்களில் கிடைக்காமல் போகலாம். அதனால் மனஅழுத்தம் ஏற்படலாம்.

Nomorestress
Nomorestress

அதைத் தவிர்த்து ஒரு வேலையை சரியாகவும் திருத்தமாகவும் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது, அது குறித்து யார் என்ன சொன்னாலும் கவலைப்படமாட்டீர்கள். அதனால், உங்களுக்கு மன அழுத்தமும் ஏற்படாது. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால் பிறரின் உதாசீனம் உங்களை ஒன்றுமே செய்ய முடியாது, உங்கள் பயணத்தையும் தடுக்காது!” என்கிறார் மனநல மருத்துவர் வெங்கேடஷ்வரன்.

Doctor venkateswaran
Doctor venkateswaran

இது போன்று பள்ளி, கல்லூரி, குடும்பம், பணியிடம், நட்பு, காதல் என அன்றாட வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அதனால் உண்டாகும் மனநலச் சிக்கல்களுக்கு தீர்வு தரக் காத்திருக்கிறது, உங்கள் விகடன்!

உங்களுடைய பிரச்னைகளை விவரமாக எழுதி, mentalhealth@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அதற்கான தீர்வுகள், நிபுணர்களிடம் கேட்கப்பட்டு விகடன் இணையதளத்தில் விரைவில் பகிரப்படும். #NoMoreStress