Published:Updated:

``கொரோனாவால் வீட்டில் தனிமை... உருவாகும் மனஅழுத்தம்!"- எதிர்கொள்வது எப்படி? #FightCovid19

கொரோனா
கொரோனா

பள்ளி, கல்லூரி, நண்பர்கள், அலுவலகம் என்று மனிதக் கூட்டத்திற்கு இடையே வாழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு, கொரோனாவால் ஏற்பட்ட இந்த திடீர் தனிமையை ஏற்றுக்கொள்ளவது கொஞ்சம் கடினமானதுதான். சிலருக்கு இந்தத் தனிமை மனஅழுத்தம், தலைவலியை ஏற்படுத்தலாம்.

'கொரோனா' - கடந்த சில மாதங்களாக முகத்தில் மாஸ்க்குடனும், கைகளில் சானிடைஸருடனும் போராடிவருகிறோம். இது நமக்கு அருகில் வராமல் இருக்க, யாரைப் பார்த்தாலும் நான்கு அடி விலகியே நிற்கப் பழகிக்கொண்டோம்.

corona
corona

வெளியில் செல்லும்போது நண்பர்களுடன் கூட்டமாகச் செல்ல விரும்பும் நாம், இப்போது தனியாகக்கூட செல்வதில்லை. சாலைகளில் வாகன நெரிசல் இல்லை; ரயில் நிலையங்களில் கூட்டம் இல்லை. தெருக்களில் மனித நடமாட்டமே தென்படுவதில்லை. எல்லாம் கொரோனா பயம்!

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும் இந்தத் தொற்றுநோய்க்கு இன்னும் சரியான தீர்வு அறியப்படாத நிலையில், மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பதே இப்போதைக்கான தீர்வாக உள்ளது. எனவே, சோஷியல் டிஸ்டன்சிங் (Social Distancing) என்பதை அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டனர்.

Social Distancing
Social Distancing

மக்கள் கூடும் இடங்களை எல்லாம் தற்காலிகமாக மூடிவிட்டனர் . நம்மில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே வேலை செய்யத் தொடங்கிவிட்டோம். எல்லாமே உடல்நலத்திற்கான தற்காப்பு நடவடிக்கைகள்தான் என்றாலும் இந்தத் தனிமைப்படுத்துதலால் நம் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதையும் மறுக்க முடியாது.

கொரோனா: எச்சரிக்கை உணர்வு அச்சமாக மாறினால் சமாளிப்பது எப்படி? - மனநல மருத்துவர் ஆலோசனை #FightCovid19

பள்ளி, கல்லூரி, நண்பர்கள், அலுவலகம் என்று மனிதக் கூட்டத்திற்கு இடையே வாழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு கொரோனாவால் ஏற்பட்ட இந்தத் திடீர் தனிமையை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கடினமானதுதான். சிலருக்கு இந்தத் தனிமை மனஅழுத்தம், தலைவலியை ஏற்படுத்தலாம்.

மனஅழுத்தம்
மனஅழுத்தம்
AdrianHillman

மேலும், ஏற்கெனவே ஓ.சி.டி போன்ற (Obsessive Compulsive Disorder) மனநலக் குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா எச்சரிக்கையும், அதைப் பற்றிய பயமும் அதீத மன உளைச்சலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள தனிமைப்படுத்துதலால் ஏற்படும் மனஅழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி? மனநல மருத்துவர் சுபா சார்லஸிடம் பேசினோம்.

"மனிதனை சமூக விலங்கு என்று சொல்வதுண்டு. அதாவது, மனிதன் தோன்றிய தினம் முதற்கொண்டு இன்றுவரை கூட்டமாகவே வாழ விரும்பு ம் ஓர் இனம். அதுவும் தற்போதைய காலகட்டத்தில் படிப்பு, வேலை போன்ற காரணங்களால் தினமும் பலரைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல வாழப் பழகி வைத்திருப்போம்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள தனிமைப்படுத்துதல், நம் அன்றாட வாழ்வைப் பாதிக்கக்கூடிய ஒன்று. இது, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு, நம் மனம் அதற்குப் பழகுவது கொஞ்சம் கடினம்தான். எனவே, இந்தத் தனிமையில் பலருக்கு மனஅழுத்தம், மன உளைச்சல், தலைவலி, வெறுப்பு போன்றவை ஏற்படுவது இயல்புதான்.

`ஜிம் முதல்... ஹேர்கட் வரை' - கொரோனாவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? #SocialDistancingIsGood

முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது கொரோனாவிற்காக ஏற்பட்டுள்ள தனிமைப்படுத்தப்படுதல் என்பது நமது தற்காப்பிற்காக நாமாகவே எடுத்துக்கொண்ட ஒன்றுதானே தவிர, இங்கு யாரும் நம்மை வலிந்து தனிமைப்படுத்தவில்லை.

தனிமை
தனிமை
Quartz

மேலும், இந்த தனிமைப்படுத்தல் என்பது 'நோய்ப் பரவலை கட்டுப்படுத்த வேண்டும்' என்ற உன்னதமான நோக்கத்திற்காக மட்டுமே. இதை மனதில் கொள்ளும்போது ஏற்படும் அவசியமற்ற கவலைகளும் மன உளைச்சலும் குறையும்.

எப்போதும் நண்பர்களுடனே இருந்து பழக்கப்பட்ட சிலருக்கு வீட்டிற்குள்ளேயே இருக்கும் இந்தத் தனிமை, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருக்கும். இருந்தாலும் இந்த டிஜிட்டல் உலகத்தில், நமக்குப் பிடித்தவர்களுடன் தொடர்புகொண்டு பேச எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இணையம், சமூக வலைதளம் போன்றவற்றில் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கலாம்.

இணையம்
இணையம்

இணையத்தில் பொழுதுபோக்கிற்கென எத்தனையோ செயலிகள் இருக்கின்றன, அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் சிலர், இந்த நேரத்தில் இணையத்திற்கு அடிமையாகும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, எப்போதும் இணையத்தில் மூழ்கி இருக்காமல் புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, எழுதுவது என்று வித்தியாசமாக முயற்சி செய்து பார்க்கலாம். இவையெல்லாம் உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கும். அதே நேரத்தில் உங்கள் நேரத்தையும் பயனுள்ளதாக்கும்.

"கொரோனா அச்சம்; மருத்துவர்களின் ஆன்லைன் பரிந்துரைகள்!"- டெலிமெடிசின் சாதகமும் பாதகமும் #FightCovid19

சிலருக்கு கொரோனா பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், அதற்கான செய்திகளும்கூட மன அழுத்தத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டிற்கு, சிலர் ஓ.சி.டி போன்ற (Obsessive Compulsive Disorder) போன்ற மனநலக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கலாம், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தாங்கள் செய்யும் செயல்களில் திருப்தி என்பதே இருக்காது. அடிக்கடி கைகளைக் கழுவிக்கொண்டு இருப்பார்கள். வீட்டைப் பூட்டிவிட்டு அடிக்கடி சரி பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

Hand wash
Hand wash
pixabay

இவர்களிடம் "நோய்க் கிருமிகள் போக கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்" என்று சொல்லும்போது கை கழுவினாலும் நம் கையில் கிருமி இருக்குமோ என்று வீணாக சந்தேகப்பட்டுக் குழம்புவார்கள். எனவே, அவர்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படலாம். இவர்கள் கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளையும், அச்சமூட்டும் செய்திகளையும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அனைவரும், தற்போது நாம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தேவையில்லாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாவதைத் தவிர்க்க வேண்டும்.

Happy
Happy

உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் வேளைகளில் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம், நேரமின்மை காரணமாக, பல நாள்களாகப் பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசலாம். புத்தகம் படிக்கலாம். மனதிற்கு ஆரோக்கியம் தரும் செயல்கள் செய்யலாம். தேவையில்லாத கவலை, மன அழுத்தத்தைத் தவிர்த்தால் கண்டிப்பாக இந்தத் தனிமையிலும் இனிமை காணலாம்" என்றார் சுபா சார்லஸ்.

அடுத்த கட்டுரைக்கு