Published:Updated:

How To: வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of mouth smell?

Representational image
News
Representational image ( Photo by Nsey Benajah on Unsplash )

தினமும் இரண்டு முறை பிரஷ் செய்பவர்களாக இருந்தாலும் துர்நாற்றம் இருக்கலாம். எதனால் பிரச்னை என மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவர்கள், உணவில் அதிக அளவில், வெங்காயம், பூண்டு சேர்ப்பதால்கூட வாய் துர்நாற்றம் ஏற்படும்.

Published:Updated:

How To: வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of mouth smell?

தினமும் இரண்டு முறை பிரஷ் செய்பவர்களாக இருந்தாலும் துர்நாற்றம் இருக்கலாம். எதனால் பிரச்னை என மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவர்கள், உணவில் அதிக அளவில், வெங்காயம், பூண்டு சேர்ப்பதால்கூட வாய் துர்நாற்றம் ஏற்படும்.

Representational image
News
Representational image ( Photo by Nsey Benajah on Unsplash )

ஒருவரோடு ஒருவர் பேசும்போது எழும் முக்கிய பிரச்னை, வாய் துர்நாற்றம். அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்வது, தீர்வுகளையும் புரிந்துகொள்ள உதவும்.

வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது?

* ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும், வாய் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னையால்தான் பெரும்பாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

பல் மருத்துவர் எஸ். முத்துராமன்
பல் மருத்துவர் எஸ். முத்துராமன்

* சொத்தைப் பல், காரைப் பற்கள், கடைவாய்ப் பற்கள் பாதி முளைத்து இருப்பது, ஈறு நோய்கள், டான்சில்ஸ், சைனஸ் போன்றவை இருந்தாலும் துர்நாற்றம் வரலாம்.

* நுரையீரல் தொற்று, அதிகப்படியான சளி, வாய், வயிற்றுப்புண், அஜீரணம், கல்லீரலில் பிரச்னை, வாயுத் தொல்லை, சில மாத்திரைகளை உட்கொள்வதால் வாய் வறட்சியாவது, மூக்கடைப்பால் வாய் திறந்து தூங்கும்போது உமிழ்நீர் சுரப்பிகளில் பிரச்னை, குறைவாக உமிழ்நீர் சுரத்தல், தூக்கத்தில் வாய் திறந்து தூங்கும் பழக்கம் போன்ற காரணங்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

உணவுகளும் துர்நாற்றமும்

தினமும் இரண்டு முறை பிரஷ் செய்பவர்களாக இருந்தாலும் துர்நாற்றம் இருக்கலாம். எதனால் பிரச்னை என மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவர்கள், உணவில் அதிக அளவில், வெங்காயம், பூண்டு சேர்ப்பதால்கூட வாய் துர்நாற்றம் ஏற்படும்.

வாய் துர்நாற்றப் பிரச்னை உள்ளவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகள், அடிக்கடி காபி, சீஸ், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்கலாம். வாயுத் தொல்லைக்காக கோலா பானங்களை அடிக்கடி அருந்துவோருக்கு துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதுபோல், மதுப் பழக்கம், புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பதும் அவசியம்.

வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம்

துர்நாற்றம் தடுக்க சில வழிகள்...

* காலை மற்றும் இரவில் கட்டாயம் பல் துலக்க வேண்டும். பற்களைச் சரியாகத் தேய்க்காமல் இருந்தால், வெள்ளைப் படிமம் போன்ற மாவு படியும். இது, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

* கொஞ்சமாகக் காரை படியும்போதே பல் மருத்துவரைச் சந்தித்து, பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

*சொத்தைப் பல்லில் உணவுத் துகள் தங்கி துர்நாற்றம் ஏற்படலாம். எனவே, இவற்றை மருத்துவர் உதவியோடு சரிசெய்ய வேண்டும்.

* ஞானப்பல் முளைக்கும் சமயத்தில் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

* ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும், வாய் கொப்பளிக்க வேண்டும். அது, நொறுக்குத்தீனியாக இருந்தாலும் சரி.

* வாய் உலராமல் இருக்க தண்ணீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கனிகளைச் சாப்பிடலாம்.

* தேவையான அளவு தண்ணீர் அருந்தாவிட்டால், உமிழ்நீரின் அடர்த்தி குறைந்து வாய் துர்நாற்றம் ஏற்படும்.

* பசியால், வாயுத் தொல்லை வரும். அதனால், வாயில் துர்நாற்றம் வீசும். ஆகவே, நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.

* காலை எழுந்ததும் ஆயில் புல்லிங் செய்யலாம். நல்லெண்ணெயை வாயில் வைத்து, வழவழப்பு நீங்கும் வரை வாய் கொப்பளித்த பின் பல் துலக்கலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?

* துர்நாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.

* எதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது என்பதை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்.

* சில மாத்திரைகளை எடுப்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது எனில், அதற்குத் தகுந்ததுபோல சிகிச்சைகள் உண்டு.

* `வயிறு தொடர்பான பிரச்னை’ எனப் பல் மருத்துவர் பரிந்துரைத்தால், வயிறு இரைப்பை மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

* டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும்.

வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் தவிர்க்க தற்காலிக டிப்ஸ்...

* பிரத்யேக ஸ்பிரேக்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இது, நிரந்தரத் தீர்வு கிடையாது.

* சர்க்கரை இல்லாத சூயிங்கம்மைச் சுவைக்கலாம்.

* வெளியே கிளம்பும்போது தண்ணீர் அருந்தலாம்.

* கைகளில் ஏலக்காயை வைத்துக்கொண்டால், திடீரென ஒரு மீட்டிங் அல்லது நிகழ்வுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின், ஒரு ஏலக்காயை மென்று தற்காலிகமாகச் சூழலைச் சமாளித்துக்கொள்ளலாம்.