Published:Updated:

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என விழிப்புணர்வை நடத்தினர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என விழிப்புணர்வை நடத்தினர்.

Published:Updated:
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் சென்னை உள்ளிட்ட பல பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சென்னை அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என விழிப்புணர்வை நடத்தினர்.

இயற்கை மருத்துவர் தீபா
இயற்கை மருத்துவர் தீபா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். கொரோனா போன்ற தொற்று நோய்கள் தாக்காமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், அற்கான இயற்கை மருத்துவ முறைகள் குறித்து , பொதுமக்களிடம் மருத்துவர்கள் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு இயற்கை சார்ந்த உணவுகள் வழங்கப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகழ்ச்சியில், யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை தலைவர் தீபா பேசியதாவது:

``தற்போதைய சூழலில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே, நாம் நோய் எதிர்ப்புத் திறனை, அதிகரித்துக் கொள்வது அவசியம். அதற்கு இயற்கையாகவே வீட்டில் இருக்கும் உணவுப் பொருள்கள் போதுமானது.

ஒரு டம்ளர் தண்ணீர், கால் ஸ்பூன் மஞ்சள், கால் ஸ்பூன் மிளகு துாள், 5 கிராம் இஞ்சிச் சாறு, 5 கிராம் அதிமதுரம் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து தினசரி அருந்த வேண்டும். பெரியவர்கள் 30 முதல் 50 மில்லி லிட்டர், சிறியவர்கள் 10 முதல் 15 மில்லி லிட்டர் அளவில் அருந்த வேண்டும்.

நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் சாறு

அதே போல், பெரிய நெல்லிக்காய் சாறு, இஞ்சி சாறு, மஞ்சள் ஆகியவற்றை பழச்சாறாக தினசரி உணவு சாப்பிடுவதற்கு முன் அருந்த வேண்டும். இப்படி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உணவு சமைக்கும்போது, இஞ்சி, பூண்டு, வெங்காயம் அதிகம் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், சுவாச பிரச்னை, நுரையீரல் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க முடியும். பசலைக் கீரை, ஆரஞ்சு ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம்'' என்று தெரிவித்தார்.