Published:Updated:

`ஒருதலைக் காதலால் அவதி... எப்படி விடுபடுவது?'- வாசகரின் கேள்விக்கு மருத்துவரின் பதில் #NoMoreStress

பெ.மதலை ஆரோன்

ஒருதலைக் காதலில் தோல்வியடைந்தவர்கள் முதலில் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

One side Love
One side Love

ஒருதலைக் காதலால் தோல்வியுற்று மிகவும் அவதியுற்று வருவதாகவும், அதிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை Mentalhealth@vikatan.com என்கிற மின்னஞ்சல் வாயிலாக, மார்கெட்டிங் துறையில் வேலை செய்துவரும் விகடன் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.

Mental Health
Mental Health

அவரின் கேள்வியை மனநல மருத்துவர் ராயிடம் முன்வைத்தோம்,

மனநல மருத்துவர் ராய்.
மனநல மருத்துவர் ராய்.

``பொதுவாக, ஒருதலைக் காதலைப் பொறுத்தவரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் உண்டு. உதாரணமாக ஒரு சிலர் அதைப் பற்றித் தெளிவான எண்ணத்துடன் இருப்பர். தன் காதலை ஏற்க மறுத்தால், அதைப்பற்றிப் புரிந்துகொள்ளக் கூடிய மனப்பக்குவம் இருக்கும். மீண்டும் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அடுத்தகட்ட வாழ்க்கையைத் தேடிச் சென்று விடுவர். ஆனால், ஒரு சிலரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் குணாதிசயம் அதற்குக் காரணம். அதைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். அதைப்பற்றி யோசிக்க யோசிக்கதான், சாதாரண வெறுப்பில் ஆரம்பித்து வன்முறை வரை கொண்டுசெல்கிறது.

ஒருதலைக் காதலில் தோல்வியடைந்தவர்கள், மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
Love Failure
Love Failure

ஒருதலைக் காதலில் தோல்வியடைந்தவர்கள் முதலில் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நண்பர்களுடனும், புதிதான செல்பாடுகளிலும் நேரத்தைச் செலவிட வேண்டும். அடுத்தகட்ட வாழ்க்கை என்னவென்பதை பார்க்க வேண்டும்'' என்கிறாய் ராய்.