Published:Updated:

Doctor Vikatan: மருந்து இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

௭ன௧்கு வயது 60. ௭ந்த இணைநாேயும் இல்லை. ௧ெட்ட ௧ாெலஸ்ட்ரால் அதி௧மா௧ உௗ்ௗது. ரேஷன் பாமாயில் பயன்படுத்து௧ிறேன். அது தவறா? மருந்து இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியுமா?

- பத்மாவதி மூர்த்தி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பிரவீன் ராஜ்
மருத்துவர் பிரவீன் ராஜ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அறுவைசிகிச்சை மருத்துவர் பிரவீன் ராஜ்.

``உங்கள் கேள்வியில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். கொலஸ்ட்ராலில் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் எனப் பல வகைகள் உண்டு. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமிருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் உணவுமுறைக்கு மாற வேண்டியது அவசியம்.

எனவே டயட்டுடன், உடற்பயிற்சியும் பின்பற்றப்பட வேண்டும். அடிக்கடி கொலஸ்ட்ரால் அளவைச் சரிபார்த்து, அது குறையாதபட்சத்தில் மருத்துவ ஆலோசனையோடு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நீரிழிவுக்காரர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமிருப்பது ஆபத்தானது.

Oil (Representational Image)
Oil (Representational Image)
Image by Marge Nauer from Pixabay
Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட்டில் அசாதாரண இதயத்துடிப்பு; இது ஆபத்தா?

கெட்ட கொழுப்பு அதிகமிருந்தால் சிகிச்சை அவசியம். பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில் என மற்ற எண்ணெய்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஏனெனில், பாமாயிலுக்கு கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் தன்மை உண்டு."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட் தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்த நேரம்... நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு பக்கமும், கொத்துக்கொத்தான மரணங்கள் இன்னொரு பக்கமுமாக மக்கள் பீதியில், பதற்றத்தில் இருந்தனர். வதந்திகளால் மிரண்டுபோயிருந்த அவர்களது பயத்தைப் போக்க, நோய்த்தொற்று குறித்த சரியான தகவல்களைக் கொண்டு சேர்க்க `Covid Questions' என்ற பகுதியை விகடன் இணையதளத்தில் ஆரம்பித்தோம். கோவிட் தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து தெளிவான விளக்கங்களைப் பெற்றுத் தரும் `கோவிட் கொஸ்டீன்ஸ்' பகுதி, 150 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் வாசகர்களின் சந்தேகங்கள் ஓய்ந்தபாடாக இல்லை.
Covid Questions
Covid Questions
AP Illustration/Peter Hamlin
தொடக்கத்தில் கோவிட் தொடர்பாக மட்டும் கேள்வி கேட்ட வாசகர்கள், தற்போது உடல் ஆரோக்கியம் தொடர்பான மற்ற சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் கேட்கத் தொடங்கி யிருக்கிறார்கள் வாசகர்கள். இனி அதற்கும் நாங்கள் ரெடி! ஆம், இனிமேல் கோவிட் தொடர்பாக மட்டுமல்ல; உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும், வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! என்ன... ஆரம்பிப்போமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு