Published:Updated:

தெலங்கானாவின் புதிய முயற்சி! - கைகொடுக்குமா திறந்தவெளி காற்று சுத்திகரிப்பு நிலையங்கள்?

காற்று மாசு
காற்று மாசு

காற்றை வடிகட்டிச் சுத்திகரிக்கின்ற இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் அமைப்பதற்குத் தயாராகி வருகிறது, தெலங்கானா மாநில அரசு. இது, இந்தியாவிலேயே முதன்முறை.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் முழுவதிலும் காற்றின் மாசுபாட்டு அளவு வெகு தீவிரம் அடைந்திருக்கிறது. சென்னையிலும் காற்றுமாசு ஏற்பட்டு நகரமே புகை மண்டலமாகச் சில நாள்களுக்கு முன் காட்சியளித்தது. நாடு முழுவதும் பரவலாக இதே நிலைதான் நீடித்து வருகின்றது.

இந்தச் சூழலில், காற்றை வடிகட்டிச் சுத்திகரிக்கின்ற இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் அமைப்பதற்குத் தயாராகி வருகிறது, தெலங்கானா மாநில அரசு. இது, இந்தியாவிலேயே முதன்முறை.

சென்னை காற்று மாசடைந்தது இன்றல்ல... 2016 ஆண்டிலிருந்தே மோசம்தான்!  என்ன காரணம்?
காற்று சுத்திகரிப்பு இயந்திரம்
காற்று சுத்திகரிப்பு இயந்திரம்

ஹைதராபாத் நகரம் முழுவதும் முக்கியப் பகுதிகளில் இந்த காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவ உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. சீனாவில் பெரிய இயந்திரங்களும், நெதர்லாந்து போலந்து ஆகிய நாடுகளில் சிறிய இயந்திரங்களும் காற்றைச் சுத்திகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் சியான் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நூறு மீட்டர் டவர் பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 15 சதவிகித மாசுபாட்டைக் குறைத்தது. தென்கொரியாவின் அன்யாங் பகுதியில் இந்தாண்டு வைக்கப்படவுள்ள 7 மீட்டர் உயரக் கருவி 30,000 கன அளவுள்ள காற்றைத் தூய்மைப்படுத்தி, சுத்திகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளில் வைக்கப்பட்டிருக்கிற இயந்திரங்களுக்கும் இங்கே அமைக்கப்படவுள்ள இயந்திரங்களுக்கும் அவற்றின் அளவுதான் வேறுபாடு. 3,420 கன அளவு காற்றை உறிஞ்சும் வகையிலான நான்கரை மீட்டர் உயர இயந்திரங்களை புனே சுற்றுச்சூழல் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் அமோல் சப்ஹேக்கர் ஹைதராபாத் நகரத்துக்காக வழங்க உள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அமோல் அளித்த பேட்டியில், ``இந்தத் திட்டம், மரங்களுக்கு மாற்று அல்ல. மாசுபாட்டைக் குறைக்கும் உடனடி நடவடிக்கைதான் இது" என்றார். எனினும் இந்தத் திட்டம் குறித்து பல தரப்பினர் தங்களது எதிர்ப்புகளையும் தெரிவித்துவருகின்றனர்.

தெலங்கானாவின் புதிய முயற்சி! - கைகொடுக்குமா திறந்தவெளி காற்று சுத்திகரிப்பு நிலையங்கள்?
`எமர்ஜென்சியை விட மோசம்'- காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

ஆராய்ச்சியாளர் பாபு ராவ் கூறுகையில், ``திறந்தவெளியில் அமைக்கப்படுகிற இந்த இயந்திரங்களால் எந்தவிதப் பயனும் இல்லை" என்றார். தெலங்கானா காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், சுத்திகரிப்பு இயந்திரங்கள் தீரவில்லை. காற்று மாசுபாட்டின் மூலக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்துவிட்டாலே சுற்றுச்சூழல் உயிர்பிழைக்கும்" என்றார்.

பின் செல்ல