Published:Updated:

Covid Questions: முதல் டோஸ் எடுத்தபிறகு பாசிட்டிவ் ஆனால், இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும்?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் நான் எப்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்?

- கமலம்

பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே.பாஸ்கர்.

இந்தியாவில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர் ஒருவர் கொரோனா முழுவதும் குணமான பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சொல்கிறார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்தில் தொற்று தொடங்கிய (உடம்பு வலி, அசதி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றியது முதல்) முதல் நாளிலிருந்து 28 நாள்கள் கழித்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி பற்றிக் கேட்டிருக்கிறீர்கள்.

கோவாக்சின் இரண்டாவது தடுப்பூசியை 4 வாரங்கள் கழித்துப் போட வேண்டும். இடையில் கொரோனா தொற்று ஏற்பட்டால், தொற்று தொடங்கிய நாளிலிருந்து 28 நாள்கள் கழித்து இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

இரண்டாவது தவணை தடுப்பூசி போடும்போது நீங்கள் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமாகி இருக்க வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசியுங்கள். கோவிஷீல்டு இரண்டாவது தவணை தடுப்பூசி இப்போது 12 முதல் 16 வாரங்களுக்குப் பிறகு போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் கோவிஷீல்டு இரண்டாவது தவணை தடுப்பூசியை 12-16 வாரங்கள் கழித்து போட்டுக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு தொற்று பத்தாவது வாரத்தில் வந்தால், அதிலிருந்து நான்கு முதல் ஆறு வாரங்கள் கழித்து, பூரண குணமாகி இருந்தால் போட்டுக்கொள்ளுங்கள்.

மருத்துவர் கே. பாஸ்கர்
மருத்துவர் கே. பாஸ்கர்
Covid Questions: தடுப்பூசி இடைவெளியை அதிகரித்த அரசு... இதற்கு முன்பு போட்டவர்கள் என்ன செய்வது?

கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்துக்கும், இரண்டாவது டோஸ் மருந்துக்கும் ஏதேனும் வித்யாசம் உண்டா? இரண்டும் ஒன்றுதானா?

- ரஞ்சனி

பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே.பாஸ்கர்.

ஆம். இரண்டு டோஸ் மருந்துகளும் ஒன்றுதான்.

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு