Published:Updated:

`சவுதியிலிருந்து திரும்பிய நபர்... கேரளா சென்று வந்த தம்பதி' - நாகையில் மூவருக்கு கொரோனா அறிகுறி?

கொரோனா திருவாரூர் மருத்துவமனை
கொரோனா திருவாரூர் மருத்துவமனை

நாகப்பட்டினம், டாடா நகரைச் சேர்ந்த தம்பதியர் கடந்த இரண்டு நாள்கள் முன்பு கேரளா சுற்றுப்பயணம் சென்று வந்ததாகத் தெரியவருகிறது. இவர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தாமாகவே வந்து மருத்துவரிடம் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

நாகையில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள 3 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

நாகை கலெக்டர் பிரவீன் நாயர்
நாகை கலெக்டர் பிரவீன் நாயர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே துளசியாபட்டினத்தைச் சேர்ந்தவர் ஒருவர், கடந்த மார்ச் 9-ம் தேதி சவுதி அரேபியாவிலிருந்து வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல், சளி தொடரவே நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 16 -ம் தேதி தாமாகவே வந்து மருத்துவரிடம் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. தனி வார்டில் வைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதுபோல் நாகப்பட்டினம், டாடா நகரைச் சேர்ந்த தம்பதியர், கடந்த இரண்டு நாள்கள் முன்பு கேரளா சுற்றுப் பயணம் சென்று வந்ததாகத் தெரியவருகிறது. இவர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தாமாகவே வந்து மருத்துவரிடம் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. எனவே, மேற்கண்ட 3 பேரையும் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 நாகை அரசு தலைமை மருத்துவமனை
நாகை அரசு தலைமை மருத்துவமனை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாகை கலெக்டர் பிரவீன் நாயர், ``மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 5 சோதனைச் சாவடிகளில் மருத்துவக்குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சோதனைச் சாவடிகளில் வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் தொலைதூரத்திலிருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, அதில் பயணம் செய்வோர்க்கு மருத்துவ பரிசோதனைச் செய்யப்படும். சோதனையின்போது கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்படுவார்கள்.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, திருக்கடையூர், வைதீஸ்வரன் கோயில் ஆகிய இடங்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் வகையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீதும், கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு