Published:Updated:

காசநோய் பாதித்தவர் குடும்பத்தில் 5-ல் 2 பேருக்கு பாதிப்பு; ஆனால், தாக்கம் இல்லை... ஆய்வு சொல்வதென்ன?

இருமல்

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களோடு இருக்கும் குடும்பத்தினர் களிடமிருந்து 1,200 ரத்த மாதிரிகளை எடுத்து முழு ரத்தப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

காசநோய் பாதித்தவர் குடும்பத்தில் 5-ல் 2 பேருக்கு பாதிப்பு; ஆனால், தாக்கம் இல்லை... ஆய்வு சொல்வதென்ன?

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களோடு இருக்கும் குடும்பத்தினர் களிடமிருந்து 1,200 ரத்த மாதிரிகளை எடுத்து முழு ரத்தப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

Published:Updated:
இருமல்

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தொற்றுநோயால் பாதிக்கப்படும் பட்சத்தில், நோய் பரவாமல் தடுக்க தனிமைப் படுத்துதல், அடிக்கடி உடைமைகளையும் இடங்களையும் சுத்தப்படுத்துதல் எனக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். 

சில நேரங்களில் அதையும் மீறி அந்தத் தொற்றால் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால், நோய் பாதிப்பு ஏற்பட்டதே தெரியாமல் இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா..?

Hand wash
Hand wash
Photo by Mélissa Jeanty on Unsplash

ஸ்டேட் பப்ளிக் ஹெல்த் நாளிதழில் வெளியான சமீபத்திய ஆய்வுத் தகவலின்படி, `காசநோயால் பாதிக்கப்பட்ட நபரோடுள்ள குடும்ப உறுப்பினர்களில், ஐந்தில் இருவர் காசநோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்நோய் உண்டாக்கும் பாக்டீரியா அவர்களில் எவ்வித நோய் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் (Latent TB Infection - LTBI) அவர்களின் உடலில் நீடித்து உள்ளது.

இந்நோய் குறித்து ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர் களோடு இருக்கும் குடும்பத்தினர்களிடமிருந்து 1,200 ரத்த மாதிரிகள் எடுத்து முழு ரத்தப் பரிசோதனைக்காக அனுப்பினர். 

அதில், 520 பேர் (சுமார் 43 சதவிகிதத்தினர்) பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆண்களில் 37.7 சதவிகிதத்தினரும், பெண்களில் 62.3 சதவிகிதத்தினரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால், இவர்களின் உடலில் எவ்வித நோய் தாக்கமும் இல்லை.

காசநோய் பாதித்தவர் குடும்பத்தில் 5-ல் 2 பேருக்கு பாதிப்பு; ஆனால், தாக்கம் இல்லை... ஆய்வு சொல்வதென்ன?

அதுவே, இவர்களில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, பாக்டீரியா செயல்படத் தொடங்கி, அதிகரித்து காசநோய் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதும் தெரிய வந்தது. இவர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்கும் பட்சத்தில், காசநோய் தொற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துவிடலாம் என மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரியும், மூத்த ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஆஷா பிரெட்ரிக் தெரிவித்துள்ளார். 

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இதே போன்ற ஆய்வில் எல்.டி.பி.ஐ-யின் (Latent TB Infection - LTBI) பாதிப்பு 74 சதவிகிதமாக உள்ளது. அதோடு பெண்களே வீட்டில் அதிக நேரம் செலவழிப்பதால், இந்நோய்த் தொற்றால் எளிதில் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.