Published:Updated:

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், முதன்முறையாக இந்தியா தயாரிக்கும் தடுப்பூசி; முக்கியத்துவம் இதுதான்!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

இதுநாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், முதன்முறையாக இந்தியா தயாரிக்கும் தடுப்பூசி; முக்கியத்துவம் இதுதான்!

இதுநாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா.

Published:Updated:
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும்போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். மற்ற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே இதற்கான மருந்துகளும் சிகிச்சைகளும் வழங்கப்படும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், முதன்முறையாக இந்தியா தயாரிக்கும் தடுப்பூசி; முக்கியத்துவம் இதுதான்!

ஆனால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பொறுத்தவரை, இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுநாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ம் ஆண்டில் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

வெளிநாட்டு தடுப்பூசி போல் அல்லது, மக்களுக்கு ஏற்ற விலையில் வாங்கிக்கூடிய வகையில், `செர்வாவாக்’ (Cervavac) என்ற ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மேலும், இந்தியாவில் 9 - 14 வயதிலிருக்கும் 5 கோடி சிறுமிகளுக்கு அரசு சார்பாக இது சிறப்பு விலையில் அளிக்கப்படும்; அதன் மூலம் இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எதிர்காலத்தில் ஒழிக்கப்பட வாய்ப்பு உண்டாகும் என்று மருத்துவத் துறையின் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் இந்தத் தடுப்பூசி முக்கியத்துவம் பெறுகிறது.

"பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்க இதுவரை வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பயன்படுத்தி வந்த நிலையில், முதன்முறையாக இந்தியாவில் ஹெச்.பி.வி. தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இத்தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும். இந்தத் தடுப்பூசிகள் மலிவாகவும், அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் இருக்கும்" என சீரம் இன்ஸ்டிடியூட் சி.இ.ஓ அடர் பூனாவல்லா (Adar Poonawalla) தெரிவித்துள்ளார்.