Published:Updated:

`கொரோனா பாதித்த 80% நோயாளிகள் தாமாகவே குணமடைவர்!' -இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம்

ஆய்வு
ஆய்வு ( மாதிரிப் படம் )

நோயாளிகளுக்கு அறிகுறிகளுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்படும். மேலும் சில நோயாளிகளுக்கு நோயின் தீவிரத்தைப் பொறுத்து புதிய மருந்துகளும் கொடுக்கப்படும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிகிதம் பேர் தாமாகவே குணமடைந்துவிடுவார்கள் என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

`அதிர்ச்சி’ அமெரிக்கா.. `லாக்-டவுன்’ ஈரோடு.. காரணம்..?' -கொரோனா அப்டேட்ஸ்

ஏறத்தாழ உலகையே சூழ்ந்திருக்கிறது, கொரோனா வைரஸ். அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. நோய் குறித்த விழிப்புணர்வு வேண்டுமென்றாலும் அது அச்ச உணர்வாக மாறிவிடுவதும் பரவலாக நடக்கிறது.

கொரோனா
கொரோனா

இந்நிலையில் இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆய்வுக்கழகத்தின் பொதுமேலாளர் பல்ராம் பார்கவா பேசியிருந்தார். அதில், “இந்த நோய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களில் 80 சதவிகிதம் பேர் குளிர்க்காய்ச்சலை உணர்வார்கள். பின்னர் தாமாகவே குணமடைந்து விடுவார்கள். ஆனால், பாதிக்கப்படுபவர்களில் 20 சதவிகித மக்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவனிக்க வேண்டியதிருக்கும். அதில், 5 சதவிகித நோயாளிகளுக்கு அறிகுறிகளுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்படும். மேலும் சில நோயாளிகளுக்கு நோயின் தீவிரத்தைப் பொறுத்து புதிய மருந்துகளும் கொடுக்கப்படும்” என்றார்.

மேலும், “இதுவரை 15,000 முதல் 17,000 வரையிலும் மாதிரிகளைப் பரிசோதனை செய்துள்ளோம். மேலும், நாள்தோறும் 10,000 மாதிரிகளைப் பரிசோதிக்கும் அளவுக்கு இங்கே வசதி உள்ளது. அதாவது வாரத்திற்கு 50,000 முதல் 70,000 மாதிரிகள் வரை பரிசோதிக்க முடியும். இந்த வைரஸ் காற்றில் பரவுவதில்லை, காற்றில் அதிகம் உயிர்வாழ்வதில்லை. அதே சமயம், நீர்த்துளிகள் வழியாகப் பரவுகிறது. எனவே தொற்றைத் தவிர்க்க,

தனித்திருத்தலே எளிய வழி” என்றார்.

கொரோனா
கொரோனா
ஸ்பெய்ன் டு கோவை... கல்லூரி மாணவிக்கு கொரோனா பாதிப்பு வந்தது எப்படி?

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், “இந்தியாவில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 80 மாவட்டங்களைத் தனிமைப்படுத்துமாறும், அவசியப்படுகிறவற்றைத் தவிர மற்ற அனைத்துச் சேவைகளையும் நிறுத்துமாறும் அந்தந்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது” என்றவர்,

“பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை வெற்றிகரமாக்கிய அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன். தற்போது வரை 415 மாதிரிகள் கொரோனா தொற்று உடையதாக உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு