Published:Updated:

"கோவிட்-19 மரணங்களைப் பதிவுசெய்ய புதிய வரைமுறைகள்!" -இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

கொரோனா மரணம் (Representative Image)
கொரோனா மரணம் (Representative Image) ( AP )

பொதுவாக, ஒருவர் மரணித்த பிறகு மரணத்துக்கான அடிப்படைக் காரணம், சம்பந்தப்பட்டவருக்கு நீண்ட நாள்களாக இருந்துவந்த நோய்கள், மரணத்தின் தன்மை ஆகியவற்றை மருத்துவர்கள் குறிப்பிட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்று மரணங்களைப் பதியும்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சில வரையறைகளை வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

பொதுவாக, ஒருவர் மரணித்த பிறகு மரணத்துக்கான அடிப்படைக் காரணம், சம்பந்தப்பட்டவருக்கு நீண்ட நாள்களாக இருந்துவந்த நோய்கள், மரணத்தின் தன்மை ஆகியவற்றை மருத்துவர்கள் குறிப்பிட வேண்டும்.

கட்டுக்குள் வராத கொரோனா - தொடரும் தொற்று அபாயம்… சென்னைக்கு நீடிக்கும் ஊரடங்கு! #WhatAfterMay3

கோவிட்-19 மரணங்களில், இந்தக் காரணங்களை வரிசைப்படுத்துவதில் பல கருத்துகள் நிலவிவந்தன. இந்த நிலையில், அவற்றை சீர்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தற்போது வெளியிட்டுள்ள வரையறை அமைந்துள்ளது. அதன்படி...

இதய நோய்
இதய நோய்

* கொரோனா தொற்றால் இறந்த நபருக்கு நிமோனியா, இதயநோய், சுவாசக் கோளாறு ஆகிய பிரச்னைகள் இருந்தாலும் இறப்பின் `அடிப்படைக் காரணமாக' கோவிட் - 19 குறிப்பிடப்பட வேண்டும்.

69 பேருக்குக் கொரோனா நெகட்டிவ்... அலோபதியும் சித்த மருத்துவமும் இணைந்ததன் வெற்றி!

* ஒருவேளை மரணத்தின்போது அவருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்படாமல் இருந்து, ஆனாலும் கொரோனா அறிகுறிகளுடன் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், அநேகமாகக் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணமாகக் கருதுவதாகப் பதிய வேண்டும்.

கொரோனா மருந்து
கொரோனா மருந்து

* கொரொனா அறிகுறிகளுடன் இறந்தவர்களுக்கு, பிரேதப் பரிசோதனையில் ஒருவேளை கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தால், 'Clinically-epidemiologically diagnosed COVID-19' என்று குறிப்பிட வேண்டும்.

அறிகுறி இல்லாதோருக்கு வீட்டிலே சிகிச்சை.. நிலவேம்பு முதல் Zinc வரை.. அரசு சொல்லும் வழிமுறைகள் என்ன?

* கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்குப் புற்றுநோய், ஆஸ்துமா, நீரிழிவு, இதய நோய் போன்றவை இருந்தாலும், அவை மரணத்தின் அடிப்படைக் காரணமாகக் கருதப்படாது. மரணத்துக்குக் காரணமான காரணிகள் என்றே குறிப்பிடப்படும்.

எளிதாக கட்டுபடுத்தக்கூடியதே நீரிழிவு நோய்!
எளிதாக கட்டுபடுத்தக்கூடியதே நீரிழிவு நோய்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், `உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 ஒரு புதிய நோய். இந்தியாவைப் பொறுத்தவரை நோயின் தாக்கத்தைக் கணிக்கவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அது குறித்த துல்லியப் புள்ளி விவரங்கள் அவசியமாகின்றன' என்று குறிப்பிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு