Published:Updated:

புற்றுநோய் சிகிச்சையில் புதிய சகாப்தம்... நம் நாட்டில் உருவான மலிவுவிலை கார் டி-செல் தெரபி!

புற்றுநோய் -சித்திரிப்பு படம்

இம்முயற்சியில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சிகிச்சைக்கு சுமார் 2 - 3 கோடி ரூபாய் செலவாகும் நிலையில் அதன் ஒரு பகுதியிலேயே இங்கு சிகிச்சை கிடைக்கும். 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் வணிகரீதியாக சிகிச்சை கிடைக்கும்.

புற்றுநோய் சிகிச்சையில் புதிய சகாப்தம்... நம் நாட்டில் உருவான மலிவுவிலை கார் டி-செல் தெரபி!

இம்முயற்சியில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சிகிச்சைக்கு சுமார் 2 - 3 கோடி ரூபாய் செலவாகும் நிலையில் அதன் ஒரு பகுதியிலேயே இங்கு சிகிச்சை கிடைக்கும். 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் வணிகரீதியாக சிகிச்சை கிடைக்கும்.

Published:Updated:
புற்றுநோய் -சித்திரிப்பு படம்

நம்மை அச்சுறுத்தும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. மருத்துவ ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளின் மூலம் இதற்கான சிகிச்சைகள் மேம்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றுதான் சி.ஏ.ஆர் எனப்படும் சிமெரிக் ஆன்டிஜென் ரிசப்டார் (Chimeric Antigen Receptor CAR-T) டி-செல் சிகிச்சை ஆகும். இதில், ஒருவகை வெள்ளை ரத்த அணுக்களான டி செல்கள் எனப்படும் நோயெதிர்ப்பு செல்களை, ஆய்வகத்தில் மாற்றுவதன் மூலம், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழி அறியப்பட்டுள்ளது. அவற்றால் புற்றுநோய் செல்களைக் கண்டுபிடித்து அழிக்க முடியும். CAR T-செல் சிகிச்சை, T செல்களுக்குள் இருக்கும் மரபணுக்களை மாற்றி, புற்றுநோயைத் தாக்க உதவுகிறது.

DNA
DNA

இந்த வகை சிகிச்சையானது, மற்ற சிகிச்சைகள் வேலை செய்யாவிட்டாலும்கூட, சில வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். CAR-T செல் சிகிச்சையானது புற்றுநோயைக் கொல்ல உடலின் சொந்த பாதுகாப்பு அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கிறது. இந்தச் சிகிச்சையானது இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. ஆனால், இப்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதன் அடிப்படையில் மலிவாகி உள்ளதால் இதற்காகப் பலகட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் புற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட CAR-T செல்களுக்கான பாதுகாப்பு சோதனைகளின் ஒரு பகுதியாக, 8 வயது சிறுமி ஒருவர் சிகிச்சை பெற்றார். மகாராஷ்டிராவின் இகத்புரி மலைப்பகுதிக்கு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் தந்தைக்கு, அந்தத் தருணத்தில் சிகிச்சைக்கான மற்ற அனைத்து வழிகளும் மூடப்பட்டு இருந்தன.

ஆனால், CAR-T சிகிச்சை தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவரின் மகளின் ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். ரத்தப் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த தன் 8 வயது மகள், இரண்டு ஆண்டுகளில் தற்போது முதல்முறையாக சாதாரணமாக சாப்பிடுவதாக, அவரின் தந்தை கண்ணீர் மல்கக் கூறியிருக்கிரார்.

புற்றுநோய்
புற்றுநோய்

ஐஐடி-மும்பை மற்றும் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் சென்டர் (டிஎம்சி) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், முதல் நோயாளி, 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஐஐடி-மும்பை விஞ்ஞானி டாக்டர் ராகுல் பூர்வார் கூறுகையில், ``இம்முயற்சியில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சிகிச்சைக்கு சுமார் 2 - 3 கோடி ரூபாய் செலவாகும் நிலையில் அதன் ஒரு பகுதியிலேயே இங்கு சிகிச்சை கிடைக்கும். 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் வணிகரீதியாக இந்தச் சிகிச்சை கிடைக்கும்'' என்றார். அவரும் டிஎம்சியை சேர்ந்த டாக்டர் கௌரவ் நருலாவும் இணைந்து இந்தத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.