Published:Updated:

`கோவிட்-19' - இந்தியாவின் முதல் எதிர் புரதப் பரிசோதனைக் கருவி கண்டுபிடிப்பு!

கோவிட் 19
கோவிட் 19

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் எதிர் புரதப் பரிசோதனைக் கருவி மூலம் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க முடியும்.

கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவலைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும், தொற்றுக்கான பரிசோதனை மக்களிடையே பரவலாக மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம். அதை கருத்திற்கொண்டு, புனே-யில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி, வைரஸ் தொற்றால் ஏற்படும் எதிர் புரதத்தைக் (Antibody) கண்டறியும் பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளது.

இது, இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் எதிர் புரதப் பரிசோதனைக் கருவி. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை இதன்மூலம் கண்காணிக்க முடியும்.

குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்
குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்

இந்திய மருத்துவப் பல்கலைக்கழகம், புனே வைரஸ் ஆராய்ச்சி மையம் இணைந்து கண்டுபிடித்துள்ள, ஐஜிஜி எலிசா (Ig G -ELISA) பரிசோதனைக் கருவியின் பெயர்... COVID KAVACH ELISA.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், ' ஐசிஎம்ஆர், என்ஐவி இவர்களின் கூட்டு முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐஜிஜி எலிசா பரிசோதனைக் கருவி, மக்களிடையே கொரோனா தொற்றைக் கண்டறிவதில் மிக முக்கியப் பங்காற்றும்' என்றிருக்கிறார்.

அனைத்து பரிசோதனை மையங்களையும் ஏன் பயன்படுத்தவில்லை?

மும்பையில் இரண்டு இடங்களில் பரிசோதித்துப்பார்த்ததில், இக்கருவி துல்லியமான நம்பகத்தன்மை வாய்ந்த முடிவுகளைக் கொடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இக்கருவிமூலம், 90 பேரின் மாதிரிகளை 2.5 மணி நேரத்தில் பரிசோதிக்க முடியும். குறைந்த செலவு, அதிகப் பரிசோதனைகள், விரைவான முடிவுகள் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். மேலும், இதை சுகாதார மையம் முதல் மருத்துவமனை வரை அனைத்து இடங்களிலும் எளிதாகப் பயன்படுத்தலாம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இக்கருவியைத் தயாரிக்கும் பணி, சைடஸ் கெட்லியா (Zydus Cadlia) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவாக அதிக எண்ணிக்கையிலான கருவிகளைத் தயாரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். கருவிகள் தயாரான பின், அதிக பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களில், இந்தக் கருவிகள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனா போரில் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்கள்! - பட்டியலை வெளியிட்ட மத்திய பயோடெக்னாலஜி துறை

நாடு முழுவதிலும் அதிக மக்கள்தொகை, அதிக வெளிமாநிலப் போக்குவரத்து உள்ள 75 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் 30 ஆயிரம் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட உள்ளன. இதன்மூலம், சமூகப் பரவலைக் கண்டறிவதுடன், தொற்று வந்த அறிகுறிகள் இல்லாமலேயே எத்தனை பேர் மீண்டுள்ளனர் என்றும் அறிய முடியும்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கொரோனா தொற்றுக்கான பரிசோதனைக் கருவிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவந்த நிலையில், இந்திய விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற பரிசோதனைக் கருவிகளைவிட நம் நாட்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக் கருவியின் முடிவு துல்லியமானதாக உள்ளது. இந்தியா, சைனாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆர்டர் செய்திருந்த அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகளின் நம்பகத்தன்மை குறைவாக உள்ளதால், இறக்குமதியை இந்தியா ரத்துசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு