Published:Updated:

அதிரவைக்கும் கல்லீரல் கணக்கு

கல்லீரல்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்லீரல்

குடி குடியைக் கெடுக்கும்!

ஊடரங்கில்கூட மது விற்பனை அமோகமாக நடக்கிறது. டார்கெட் நிர்ணயித்து கொழிக்கிறது டாஸ்மாக் நிறுவனம். வீட்டுக்காக ரேஷன் கடைகளில் நிற்காத குடும்பத் தலைவர்கள் பலரும் மதுக்கடை வரிசையில் கால்கடுக்க நிற்கிறார்கள். ஊரடங்கில் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்ட நிலையில், எதை எதையெல்லாம் அடகுவைத்து பணத்தைச் சேர்த்தார்களோ!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் மனித சக்தி படிப்படியாக குறைந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கட்டட வேலை, விவசாய வேலை உள்ளிட்ட மனித உழைப்பு தேவைப்படும் இடங்களில் உள்ளூர் ஆட்களின் பங்களிப்பு குறைந்து, வட மாநிலத்தவர் முழுவீச்சுடன் பணிபுரிகிறார்கள் (ஊரடங்கில் நிலைமை வேறு). கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து மேலதிக விவரங்களை அறிய களமிறங்கியது விகடன் ஆர்.டி.ஐ குழு.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் தொடர்புடைய நோய்களுக்காகச் சிகிச்சை பெற்றவர்கள் விவரம்:

அதிரவைக்கும் கல்லீரல் கணக்கு

2014, ஜனவரி முதல் 2019, மார்ச் மாதம் வரை மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டோம். சென்னை ஸ்டான்லி, சேலம், தருமபுரி அரசு மருத்துவமனைகளிலிருந்து பதில் கிடைக்கவில்லை. எனவே, மேல்முறையீட்டு மனு அனுப்பினோம். ‘சென்னை ஓமந்தூரார், விழுப்புரம், தஞ்சாவூர், வேலூர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை’ என்று பதிலளித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிர, தமிழகத்தில் செயல்படும் 24 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகள் மற்றும் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களிடமிருந்து கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன. (பார்க்க இன்ஃபோகிராப்)

`மதுப்பழக்கம் கல்லீரலை எவ்வாறு பாதிக்கிறது?’ என்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரும், சென்னை லிவர் ஃபவுண்டேஷன் நிறுவனருமான ஆர்.பி.சண்முகத்திடம் பேசினோம். “ஒருவர் தொடர்ந்து மது அருந்தினால் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரலின் செல்கள் பாதித்து, வீக்கத்தை ஏற்படுத்தி, அழற்சியை (Hepatitis) உண்டாக்குகிறது. ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் தென்படாது. 70 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பிறகே தெரியும். கல்லீரல் அழற்சிக்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், மேலும் மோசமடைந்து கல்லீரல் ஃபைப்ரோசிஸ் (Liver Fibrosis) ஏற்படும்.

அதிரவைக்கும் கல்லீரல் கணக்கு

இந்த நிலையில் கல்லீரல் செல்கள்மீது நார்கள் உருவாகி, அவற்றின் இயக்கத்தைக் குறைத்துவிடும். அடுத்தநிலை கல்லீரல் சிரோசிஸ் (Liver Cirrhosis). கல்லீரலில் உருவான நார்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரலைச் சுருங்கச் செய்து, மொத்தமாகச் செயலிழக்க வைக்கும். தொடர்ந்து கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் இருப்பவர்களை உயிர் பிழைக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு’’ என்றார்.

குடி குடியைக் கெடுக்கும்... வேறென்ன சொல்ல!