Published:Updated:

`வழுக்கைத்தலை உள்ளவர்களை கொரோனா தாக்க அதிக வாய்ப்பா?' - ஆய்வு முடிவும் மருத்துவர் விளக்கமும்

bald head
bald head ( representational )

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த முதல் மருத்துவர் ஃப்ராங் காப்ரின், வழுக்கைத் தலையுள்ளவர். எனவே, வழுக்கைத் தலையுள்ளவர்களுக்கு தீவிர கொரோனா தொற்று ஏற்படுவதை `காப்ரின் சைன்(Gabrin Sign)' என்று அவர் பெயரால் அழைக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்துவருகின்றனர்.

கோவிட்-19 வைரஸின் தன்மை மற்றும் தொற்றின் இயல்பு பற்றி ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. உலக அளவில் இந்நோய் குறித்த ஆராய்ச்சியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள பிரவுன் யுனிவர்சிட்டியில் பணியாற்றும் பேராசிரியர் கார்லஸ் வேம்பையர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், வழுக்கைத்தலை உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா
கொரோனா

`வழுக்கைத்தலை இருப்பவர்களுக்கு ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். இந்த அதிக ஹார்மோன் சுரப்பு இருப்பவர்களின் உடலில் வைரஸ் எளிதாக நுழைந்துவிடுகிறது, தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது' என்று கூறியிருக்கிறார் பேராசிரியர் கார்லஸ்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 79% ஆண்கள் வழுக்கைத்தலையுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. `வழுக்கை மற்றும் புராஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் அளவைக் குறைக்க மேற்கொள்ளப்படும் அதே சிகிச்சையை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அளித்தால், அது ஆண்ட்ரோஜன் ஹார்மோனைக் குறைத்து நோயாளிகள் வைரஸை எதிர்த்துப் போராட உதவும்' என்று கூறியுள்ளார் பேராசிரியர் கார்லஸ். `இந்த ஹார்மோன் சிகிச்சை கொரோனாவை எதிர்க்கப் பயன்படுமா என்பது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவை' என்று கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

bald head
bald head
Representational image

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த முதல் மருத்துவர் ஃப்ராங் காப்ரின், வழுக்கைத் தலையுள்ளவர். எனவே, வழுக்கைத் தலையுள்ளவர்களுக்கு தீவிர கொரோனா தொற்று ஏற்படுவதை `காப்ரின் சைன்(Gabrin Sign)' என்று அவர் பெயரால் அழைக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்துவருகின்றனர்.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மடாலஜி இதழின் ஆராய்ச்சி முடிவில், தாங்கள் ஆராய்ச்சி செய்த 41 நோயாளிகளில் 71% கொரோனா நோயாளிகள் வழுக்கைத் தலையாளர்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இத்தாலியில் 9,280 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், புராஸ்டேட் புற்றுநோய்க்காக ஆண்ட்ரோஜன் ஹார்மோனைக் குறைக்கும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு, கொரோனா தொற்று வருவதற்கான வாய்ப்புக் குறைவாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஹார்மோன் சிகிச்சை பயனளிக்குமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் தேவை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஹேமா சதீஷ்
ஹேமா சதீஷ்
சென்னைக்குள் நுழைய, வெளியேறத் தடையா... இ பாஸ் நிறுத்தமா? - நிஜ நிலவரம் என்ன?

இதுகுறித்து சரும மருத்துவர் ஹேமா சதீஷிடம் பேசினோம். ``கொரோனா வைரஸ் ஒரு புது வகை வைரஸ் என்பதால் அது பற்றிய புதிய ஆராய்ச்சி முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. பெண்களைவிட ஆண்கள் அதிகமாகக் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழலில், சில ஆராய்ச்சி முடிவுகள் ஆண்ட்ரோஜன் ஹார்மோனுக்கும், கொரோனா தொற்றின் தீவிரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றன. என்றாலும், வழுக்கை மட்டுமே கொரோனா தொற்று ஏற்படவோ, நோயின் தீவிரம் அதிகரிக்கவோ காரணமாக இருப்பதில்லை. நாள்பட்ட நோய், எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியன கோவிட்-19 தீவிர நிலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆண்ட்ரோஜனுக்கும் கொரோனா வைரஸுக்குமான தொடர்பு குறித்த ஆராய்ச்சி இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு