Published:Updated:

ஆர்த்ரைட்டிஸ் நோய்க்குப் பயன்படுத்தும் மருந்து கொரோனா வைரஸுக்குத் தீர்வாகுமா?

ஆர்த்ரைட்டிஸ்
ஆர்த்ரைட்டிஸ்

தற்போது சீனாவில், ஆர்த்ரைட்டிஸ் நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்தை கொரோனா வைரஸுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று சீன அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகளவில் மக்களை பீதியடைய வைத்துவரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் தீவிரமாக ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியோ, குணமாக்கும் மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Vikatan

தற்போது சீனாவில், ஆர்த்ரைட்டிஸ் நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்தை கொரோனா வைரஸுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று சீன அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆக்டெம்ரா (Actemra) என்ற இந்த மருந்து அழற்சி எதிர்ப்புக்கான (anti inflammatory) மருந்து. ஸ்விஸ் நாட்டு மருந்து நிறுவனமான Roche தயாரித்து வரும் இம்மருந்து, கொரோனா உயிர்க்கொல்லி நோயின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடும் அருமருந்தாக அமைந்துள்ளது.

கொரோனா
கொரோனா

சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் 2 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆக்டெம்ரா மருந்தை சீனாவுக்கு இலவசமாக அளித்துள்ளது. ஆக்டெம்ரா மருந்துக்கு 10 வருடங்களுக்கு முன்பே உபயோகத்துக்கான அனுமதி வழங்கப்பட்டாலும், இது கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவது இதுதான் முதன்முறை. இம்மருந்து நிறுவனம் கொரோனா வைரஸைக் கண்டறியும் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.

`குணமாகி திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு?!- தொடர் பீதியில் சீன மக்கள்

ஆக்டெம்ரா மருந்து எந்த அளவுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் என்பதற்கு முழுமையான தரவுகள் இதுவரை இல்லை. விரைவில் ஆராய்ச்சிகள் முடுக்கப்படலாம். உலகெங்கும் 90 நாடுகளில் கிட்டத்தட்ட 93,000 பேரை பாதித்து, 3,000 பேரின் உயிரைக் குடித்த கொரோனாவை அழிக்க இம்மருந்து கைகொடுக்க வேண்டும் என்பது மருத்துவத் துறையின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

'ஆர்த்ரைடிட்ஸுக்கு பயன்படுத்தப்படும் ஆக்டெம்ரா மருந்து கொரோனா வைரஸை அழிக்க வல்லதா?' என்று முடநீக்கியல் மருத்துவர் மற்றும் மருந்தியல் மருத்துவர்கள் சிலரிடம் கேட்டோம். 'இந்தக் குறிப்பிட்ட மருந்தைப் பயன்படுத்தி கொரோனா குணமானதற்கான தரவு எதுவும் இதுவரை இல்லை.

முயற்சி செயல்படுத்தப்பட்டுப் பார்க்கப்படுகிறது. பரிசோதனைகளுக்குப் பின், தீர்வு கிடைத்துள்ளது என்பது தெரியவந்தால் கொரோனாவுக்கு எதிரான ஆக்டெம்ராவின் செயல்திறனை உறுதிசெய்யலாம். தற்போதைய சூழ்நிலையில் நாங்கள பரிந்துரைக்க இயலாது' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு