Published:Updated:

7,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு நேரடித் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்!

கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன்
News
கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன்

குறிப்பிட்ட பகுதியில் ஒரே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய்த் தொற்றுக்கான காரணம் உறுதியாகச் சொல்லப்படாத நிலையில் இருப்பதுதான் கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன்.

ஏராளமான ஆய்வுகளுக்குப் பிறகு கோவிட் 19 என்பது, 'கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன்' அதாவது சமூகப் பரவுதல் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் பற்றிய போதிய தெளிவு இல்லாமல் போனதே இத்தாலியின் அதிகபட்ச கொரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான முதன்மை காரணம். கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் என்றால் என்ன, நோய்த்தொற்றை எப்படியெல்லாம் தடுக்கலாம் என்பதைப் பற்றி ஆய்வாளர்களின் கணிப்புகள் இதோ.

Corona
Corona

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நோய் பரவுதலின் நிலைகள்:

பொதுவாக நோய் பரவுதலை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம்.

முதலாம் நிலை - இம்போர்ட்டட் வழக்குகள் (Imported Cases):

வைரஸால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவுக்குத் திரும்பி வந்தவர்கள் இம்போர்ட்டட் வழக்கின் கீழ் வருவார்கள். இவர்களைக் கண்டுபிடிப்பது எளிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாம் நிலை - லோக்கல் டிரான்ஸ்மிஷன் (Local Transmission):

பயண வரலாறு கொண்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட வழக்குகள். இவர்களைக் கண்டுபிடித்து இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் கண்காணிப்பில் வைக்கவேண்டும்.

மூன்றாம் நிலை - கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் (Community Transmission):

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவரோடு எந்தவிதத் தொடர்பு இல்லாமலும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றுவந்த பயண வரலாறு இல்லாமலும் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் நிலை கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன். இந்த நிலையில் நாட்டின் பெருமளவு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.

நான்காம் நிலை - எபிடெமிக் (Epidemic):

தெளிவான இறுதிப் புள்ளி இல்லாத தொற்றுநோயின் கடைசி மற்றும் மோசமான நிலை எபிடெமிக்.

Doctors in charge
Doctors in charge
கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன்:

குறிப்பிட்ட பகுதியில் ஒரே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய்த் தொற்றுக்கான காரணம் உறுதியாகச் சொல்லப்படாத நிலையில் இருப்பதுதான் கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன். அதாவது, பாதிக்கப்பட்ட நபர் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நாடு அல்லது இடத்திற்குச் சென்றதற்கான பயண வரலாறு இல்லாமலும் அல்லது நேரடியாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் தொடர்பு இல்லாமலும் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டிருக்குமானால், அந்நிலைதான் கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன்.

இந்தக் கொரோனா நோய்த்தொற்றில் இருக்கும் மிகப் பெரிய சவால் தனக்குள் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பது பாதிக்கப்பட்டவருக்கும் தெரியாது, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தெரியாது. இந்த நோய்க்கான அறிகுறிகள் சில நாள்களுக்குப் பிறகே வெளிப்படும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர் எண்ணிலடங்கா நபர்களுக்கு நோய்த்தொற்றைப் பரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதனால்தான், 'சோஷியல்' அல்லது 'பிசிகல்' டிஸ்டன்ஸிங் முறையை அனைவரையும் பின்பற்றச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்தியாவின் நிலை:

நோய் பரவுதலின் மிக முக்கியமான கட்டத்தை இந்தியா கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆலோசனை மையத்தின் கருத்தின்படி, கடந்த வாரம்வரை இந்தியா நோய்ப் பரவுதலின் இரண்டாம் கட்டத்தில்தான் இருந்திருக்கிறது. அதாவது, 'லோக்கல் டிரான்ஸ்மிஷன்'. இதன் மூன்றாம் நிலைதான் கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன். அந்த அளவிற்கு இந்தியா இன்னும் செல்லவில்லை என்று குறிப்பிட்டனர்.

ஆனால், தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஏராளமான கேள்விகள், சந்தேகங்களை எழுப்பியும், கடந்த வாரம் புதன்கிழமை தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்பட்ட 20 வயதான டெல்லி குடியிருப்பாளரின் நோய்த்தொற்றுக்கான ஆதாரத்தை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை. 'அப்படியானால், அவர்தான் முதல் கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷனா' போன்ற பல மனக்குழப்பத்திலும் சந்தேகத்திலும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர் இந்திய மக்கள்.

Flight Passengers
Flight Passengers

குறிப்பிட்ட அந்த நபர் டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அது எப்போது என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெளிநாட்டுப் பயணத்தின் எந்த வரலாறும் அவரிடமில்லை. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் நேரடித் தொடர்பில் அவர் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

இதுபற்றி இந்தியத் தலைமை உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (Indian Council of Medical Research (ICMR)) பணிபுரியும் தொற்றுநோயியல் தலைவர் டாக்டர் ஆர்.ஆர்.கங்ககேத்கர், "அவருக்கு எந்தவிதமான பயண வரலாறும் இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியிருக்கிறோம். எனவே, அவருக்கு எப்படி நோய்த்தொற்று வந்தது என்பதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.

Corona Virus
Corona Virus

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறார் என்பதை ஆவணப்படுத்துவோம். அதன் பிறகு, அவர் மறைமுகமாகத் தொடர்புகொண்ட நபர்களைத் தேடுவோம். சில நேரங்களில் அவர் யாரோடு தொடர்பில் இருந்திருப்பார் என்பது அவருக்கே தெரிந்திருக்காது. இப்படி எல்லாச் சூழலையும் நினைவில்கொண்டுதான் விசாரித்து வருகிறோம்.

Corona
Corona

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் 1,12,000 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிலிருந்து பயணம் செய்தவர்கள்தான். அவர்களில் 7,000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு நேரடித் தொடர்பில் இருந்தவர்கள். அவர்களை மேலும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் கங்கேதகர்.

இந்நிலையில் நேற்று (23.03.20), கோவிட் -19-ன் கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷனின் முதல் வழக்கு மதுரையில் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 54 வயது நபரிடம், வெளிநாட்டுப் பயண வரலாறு எதுவும் அவர்களிடம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நாளன்று சென்னை மற்றும் திருப்பூரில் பரிசோதனை செய்த மற்ற இரண்டு நோயாளிகளுக்கு லண்டன் சென்றதற்கான பயண வரலாறு இருந்திருக்கிறது. எனவே, இந்தியாவின் முதல் கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் நபர் மதுரையில் பரிசோதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கான அறிகுறி.

Minister Vijaya baskar
Minister Vijaya baskar

இதனைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், "தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நிலை இப்போது மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா தொற்றுநோய் மிகவும் வேகமாகப் பரவி வருவதால், நாம் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும். அரசின் உத்தரவை மக்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியம். இதனை சமூகத் தொற்றாக மாறாமல் இருக்க அனைவரும் இதனைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும். டெல்லியிலிருந்து வந்த இளைஞருடன் தொடர்பில் உள்ள 193 பேரைக் கண்காணித்து வருகிறோம். மிகவும் சவாலாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் கொரோனா பரவுவதால் மக்கள் ஒத்துழைப்பு அவசியம்" என்று கூறியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வழக்குகள் இந்தியாவில் விரிவடைந்துள்ள நிலையில் அதிகப்படியான நோய்ப் பரவுதலைத் தடுப்பதற்காக ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணிகள் நுழைவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்தத் தற்காலிக நடவடிக்கை வரும் மார்ச் 31 வரை நடைமுறையில் நிச்சயம் இருக்கும். அதன்பிறகு இந்நிலை மாறலாம் அல்லது நாள்கள் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி 'பிசிகல் டிஸ்டன்சிங்' மட்டுமே. ஒவ்வொருவரும் தனி மனித சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். முடிந்தவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.