Published:Updated:

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானதா?

பள்ளிக் குழந்தைகள் ( Pandi.U )

கோவிட் தொற்று எப்போது நம்மைவிட்டு  முழுமையாக விலகும் என்று கணிக்க முடியாத சூழலில், அதை நினைத்து பயந்து, பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பாமல் இருக்க முடியாது. 

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானதா?

கோவிட் தொற்று எப்போது நம்மைவிட்டு  முழுமையாக விலகும் என்று கணிக்க முடியாத சூழலில், அதை நினைத்து பயந்து, பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பாமல் இருக்க முடியாது. 

Published:Updated:
பள்ளிக் குழந்தைகள் ( Pandi.U )

Doctor Vikatan: பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் குழந்தைகளை கோவிட் தொற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பது? குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதில் எந்தப் பெற்றோருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அதே சமயம் அவர்களின் ஆரோக்கியம் அதைவிட பெரிதல்லவா? தற்காப்பு மருந்துகள், வீட்டு வைத்தியங்கள் ஏதேனும் இந்த விஷயத்தில் உதவுமா?

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்


பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

எல்லாப் பெற்றோருக்கும் குழந்தைகளின் கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவர்களது ஆரோக்கியமும் முக்கியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இது பெரிதா, அது பெரிதா என வாதம் செய்யாமல் சமயோசிதமான முடிவு எடுக்க வேண்டும். கோவிட் தொற்று பயத்தைக் காரணம் காட்டி, குழந்தைகளின் கல்வியைத் தியாகம் செய்ய முடியாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு கோவிட் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகளான முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்றவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவற்றை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வயதில் உள்ள பிள்ளைகளுக்கு அதைத் தவறாமல் போட்டுவிடுவது அவசியம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி
குழந்தைகளுக்கு தடுப்பூசி
Photo: Vikatan / T. Vijay

வைரஸானது, உருமாறிக்கொண்டேதான் இருக்கும். அதனால்தான் அதனுடன் வாழப் பழக வேண்டும் என ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது. கோவிட் தொற்று எப்போது நம்மைவிட்டு முழுமையாக விலகும் என்று கணிக்க முடியாத சூழலில், அதை நினைத்து பயந்து, பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பாமல் இருக்க முடியாது.

வைட்டமின் சப்ளிமென்ட்டுகளோ, வீட்டு வைத்தியங்களோ, கோவிட் தொற்றில் இருந்து காப்பாற்றும் என்பதற்கான எந்த அறிவியல்பூர்வ ஆதாரங்களும் நம்மிடம் இல்லை. எனவே, அவற்றை நம்பாமல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவு, வாழ்வியல் முறைகளை அளிப்பதுதான் சிறந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism