Published:Updated:

`தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க ஆறடி போதுமா?’ - புதிய கேள்வியை எழுப்பும் ஆய்வு

corona
corona

உயரம் குறைவானவர்கள், குழந்தைகள் நீர்த்திவலைகள் பயணிக்கும் பாதையில் இருந்தால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து 6 அடி தூரம் தள்ளி இருந்தால் கொரோனா தொற்று பரவாது என்று கூறப்பட்டது.

corona
corona

தற்போது பிசிக்ஸ் ஆப் ஃபுளூயிட்ஸ்( Physics of Fluids) என்ற விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், மணிக்கு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்போது 18 அடி வரை 5 விநாடிகளில் நீர்த்திவலைகள் பரவலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் கொரோனா தடுப்பில் ஆறடி இடைவெளியைக் கடைப்பிடிப்பது போதுமானதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

`வேதனையான நாள்களைக் கடந்து வந்திருக்கிறேன்!' -துபாயில் தவித்த தேனி இளைஞர் ஊர் திரும்புகிறார்

உயரம் குறைவானவர்கள், குழந்தைகள் நீர்த்திவலைகள் பயணிக்கும் பாதையில் இருந்தால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஒருவர் இருமினால் அதில் வெளிப்படும் ஒவ்வொரு நீர்த்திவலையும் எப்படிப் பயணிக்கிறது என்று ஆராயப்பட்டுள்ளது.

Living with corona
Living with corona

நில மேற்பரப்பின் வெப்பநிலையைக் கொண்டு காற்றில் நீர்த்திவலைகளின் தன்மையை அறிய வேண்டும் என்றும், உள் அரங்குகளில், அதிலும் குளிர்சாதன வசதி உள்ள இடங்களில் காற்றில் நீர்த் திவலைகளின் படியும் தன்மையைப் பொறுத்தே தொற்றின் பரவலை அறிய முடியும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு