Published:Updated:

"சருமத்தில் ஏற்படும் தடிப்புகளும் அரிப்புகளும் கொரோனாவின் அறிகுறியா?"

corona
corona

இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வில், உடலில் திட்டுத் திட்டாக சிவந்த நிறம் காணப்படுவதும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது .

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய ஆறு அறிகுறிகளைச் சொல்லி பீதியைக் கிளப்பியிருக்கிறது, அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம். இந்நிலையில், சருமத்தில் காணப்படும் சிவந்த நிறத் திட்டுகளும் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சிலர்.

corona
corona

அவர்களது ஆய்வில், இந்த நிற மாற்றமும், திட்டுகளும், அரிப்பு மற்றும் ஒவ்வாமையால் ஏற்படுவதில்லை என்றும் கண்டுபிடித்திருக்கின்றனர். இதையடுத்து, இத்தாலி இதை அடுத்தகட்ட ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இதுபற்றிய விளக்கங்களைப் பெற சரும மருத்துவர் தினேஷ் பொன்ராஜிடம் பேசினோம்.

கொலை செய்யும்போது `ஆன்' ஆன செல்போன்; காட்டிக்கொடுத்த ஆடியோ! - சென்னைக் கடற்கரையில் நடந்த கொடூரம்

"கொரோனா வைரஸ் பற்றி வெவ்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதில், கொரோனா நோய்க்கான புதுப்புது அறிகுறிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளிலும் காலின் பெருவிரல் மரத்துப் போதல் மற்றும் நிறம் மாறுதல் போன்றவை கொரோனாவின் அறிகுறிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சரும மருத்துவர் தினேஷ் பொன்ராஜ்
சரும மருத்துவர் தினேஷ் பொன்ராஜ்

இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வில், உடலில் திட்டுத் திட்டாக சிவந்த நிறம் காணப்படுவதும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது .இவற்றையெல்லாம் உறுதிப்படுத்த நம்மிடையே போதுமான தகவல்கள் இல்லை. இந்தியாவில் இதுவரை இந்த மாதிரியான அறிகுறிகள் வந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை இதை நாம் இதுவரை கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

இனி வரும் காலங்களில் இதையும் கவனிக்க வேண்டியிருக்கும். ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டால், சருமத்தில் தடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. ஒன்று முதல் 5 சதவிகித மக்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு சரியான பின் இந்த மாதிரியான தடிப்புகள் ஏற்படும் . அதற்கு வைரஸ் எக்ஸாந்தம்(virus exanthem) என்று பெயர்.

 Test
Test

இவை எல்லாம் வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளாகவே உள்ளன. சரும மருத்துவத்தில் இதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டு, முடிவகள் வந்த பிறகே இது கொரோனாவின் அறிகுறியா என்பதை உறுதிப்படுத்த முடியும். அதே நேரம், கொரோனா காலத்தில் மட்டும் மக்களுக்கு ஏற்படும் தடிப்புகளையும், அரிப்பையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியதும் அவசியம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு