Published:Updated:

கொரோனா: `மீண்டும் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை; 3-வது அலையின் ஆரம்பமா?' - பதில் கூறும் மருத்துவர்

corona
corona ( AP Photo / Channi Anand )

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஓரிரு வாரங்களில் ஆரம்பமாகிவிடும் என்றும் தினசரி தொற்றின் பாதிப்பு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இருக்க வாய்புள்ளதாகவும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் நிகழ்த்திய ஆய்வில் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. அதேபோல, கடந்த ஒரு வார காலத்தில் மட்டும், சென்னையிலும் தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கொரோனாவிலிருந்து குணமடைபவர்களைவிட  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. 

 Covid
Covid
AP Photo / Channi Anand
மெள்ள மெள்ள அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; - மூன்றாவது அலையைத் தடுக்க தமிழக அரசு தயாரா?

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஓரிரு வாரங்களில் ஆரம்பமாகிவிடும் என்றும் தினசரி தொற்றின் பாதிப்பு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இருக்க வாய்புள்ளதாகவும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் நிகழ்த்திய ஆய்வில் கணித்துள்ளனர். ஆனால், கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் இரண்டாவது கொரோனா அலையைவிட பலவீனமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா இரண்டாவது அலையைப் பலரும் எதிர்பார்க்காத நிலையில், கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தை எட்டும் என முன்கூட்டியே கணித்ததும் இவர்கள்தாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சுதர்ஷனிடம் பேசுகையில், ``ஊரடங்கின்போது தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தவர்களின் எண்ணிக்கையைவிட தற்போது பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு நாள்களாகத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. ஆனால், தொற்றால் பாதிப்புக்குள்ளாகிறவர்களின் எண்ணிக்கையும் பயப்படும் அளவுக்குப் பெருவாரியாக அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

முதலாவது கொரோனா அலை வயதானவர்களையும் இரண்டாவது அலை வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதித்தது. ஆனால், கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள்தாம் அதிக அளவில் பாதிக்கப் படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல், தற்போது இந்தோனேசியாவில் கொரோனாவால் குழந்தைகளின் இறப்பு அதிகரித்திருப்பது ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல்தான் புதுச்சேரியிலும் ஏறக்குறைய 25 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். ஆனால், அவர்களில் எந்தக் குழந்தையும் தீவிர பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பது பின்னரே உறுதியானது.

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சுதர்ஷன்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சுதர்ஷன்

நோய் எதிர்ப்பு சக்தி, ரத்தச்சோகை போன்ற பிரச்னை உள்ள குழந்தைகளுக்குத்தான் தொற்று ஏற்பட்டால் தீவிர பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றபடி, குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டால் அதிகபட்சம் 4 நாள்களில் காய்ச்சல் சரியாகிவிடும். ஒருவேளை சரியாகாவிட்டால் உடனேயே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்.

இரண்டாவது அலைதான் உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்திய அலையாக இருக்கக்கூடும். இந்தியாவில் இதுவரை கிட்டத்தட்ட 10% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 70% மக்களுக்காவது தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

மூன்றாம் அலை அச்சம்: குழந்தைகளின் எதிர்ப்பாற்றலை எப்படி அதிகப்படுத்தலாம்? வழிகாட்டும் ஆயுர்வேதம்!

அப்போதுதான் பெருந்தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள இயலும். இது சாத்தியப்பட ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடகாலம் வரை ஆகலாம். அதுவரை போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியது கட்டாயம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு