Published:Updated:

`பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை!' - கொரோனா வார்டு டியூட்டியால் ராஜினாமா செய்த மருத்துவ தம்பதி

மருத்துவ உபகரணங்கள்
மருத்துவ உபகரணங்கள்

ஜார்க்கண்ட் சிங்பம் ஊரிலிருக்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அலோக் திர்கி மற்றும் அவரின் மருத்துவர் மனைவி, தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

கொரோனா தொற்று அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில் மருத்துவர்கள் தன்னலம் பாராமல் மக்களுக்குப் பணியாற்றி வருவது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியது.

இத்தாலியில் நடந்ததும் இங்கு நடப்பதும்... ஒரு நேரடி அனுபவத்துடன் 'கொரோனா' பாடங்கள்!

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிங்பம் என்ற ஊரிலிருக்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அலோக் திர்கி மற்றும் அவரின் மருத்துவர் மனைவி, தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

இது தொடர்பாக அம்மாநிலத்தின் சுகாதாரச் செயலாளர், `திர்கிக்கு மீண்டும் பணியில் சேர 24 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. மீறினால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு, ஜார்க்கண்ட் எபிடெமிக் டிசீஸ் ரெகுலேஷன் 2020, மற்றும் எபிடெமிக் டிசீஸ் சட்டம் 1897-ன் கீழ் வழக்கு பதியப்படும்' என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். அதையடுத்தும் அவர் பணியைத் தொடரவில்லை என்றால் அவரது மருத்துவர் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

`தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!’ - குஜராத்தில் இரண்டாவது உயிரிழப்பு #NowAtVikatan

முன்னதாக தும்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த திர்கி, சில வாரங்களுக்கு முன்புதான் சர்தார் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். வேலையில் சேர்ந்த சில நாள்களிலே அவர் கொரோனா பாதிப்புப் பிரிவுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதில் சில கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்ததன் காரணமாக அவர் தன் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

கொரோனா: `சூப்பர் ஆக்‌ஷன் டீம்’ அமைக்க ஆவன செய்யுமா தமிழக அரசு?
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`கொரோனா பாதிப்புப் பிரிவில், காலை 10 மணி முதல் 1 மணிவரை எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நான் அங்கே பணிபுரிந்தேன். அது மட்டுமன்றி என்னைத் தவிர வேறு எந்த மருத்துவரும் அங்கே பணி அமர்த்தப்படவில்லை. மருத்துமனையில் இருக்கும் இதுபோன்ற பாகுபாடுகளைக் காரணம் காட்டி நான் ராஜினாமா செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார் திர்கி. மேலும், தன் மனைவிக்கும் சகோதரிக்கும் உடல் நலம் சரியில்லை, இந்நேரத்தில் அவர்களுக்குத் தொற்றைத் தவிர்க்க தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு திர்கி, `நான் எங்கும் தப்பித்து ஓடவில்லை. என் சேவையை மக்கள் நன்கு அறிவார்கள்' என்று கூறியிருக்கிறார்.

கொரோனா
கொரோனா

தற்போது இந்தியா 21 நாள் லாக்டௌனில் இருக்கும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ நெருங்கிக்கொண்டிருப்பதும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஐ தாண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு