Published:Updated:

`அக்டோபரில் கொரோனாவின் மூன்றாம் அலையா?' - மருத்துவர்கள் கூறும் விளக்கம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( Pixabay )

கடந்தாண்டு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தில் இருந்தது. அதன் பின் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரங்களாகக் குறைந்தது. இப்போது தினமும் கொரோனா பாதிப்புக்கு உட்படுவோரின் எண்ணிக்கை மூன்று, நான்கு லட்சம் என அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு அதிகரித்து, மீண்டும் கொரோனா பரவும் தன்மை குறைந்து, மீண்டும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையே இரண்டாம் அலை என்கிறோம்.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
Pixabay

அதாவது கடந்தாண்டு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தில் இருந்தது. அதன் பின் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரங்களாகக் குறைந்தது. இப்போது தினமும் கொரோனா பாதிப்புக்கு உட்படுவோரின் எண்ணிக்கை மூன்று, நான்கு லட்சம் என அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா இருக்கிறது. கர்நாடகாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 48,296 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Covid-19 Outbreak
Covid-19 Outbreak

இந்நிலையில் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (TAC) வழங்கியுள்ள தகவலின்படி, 2021-ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கர்நாடகாவில் கொரோனா மூன்றாம் அலை உருவாகலாம் என்று கூறியுள்ளது. அக்குழுவின் தலைமை மருத்துவர் எம்.கே.சுதர்சன், 'அக்டோபர் மாதம் வரும் மூன்றாம் அலையில் வயதானவர்களைவிட இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படலாம்' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தொற்றுநோய் மருத்துவர் சுந்தர்ராமனிடம் பேசினோம். ``இந்தியாவில் இப்போதுவரை எல்லா மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலையே வீசுகிறது. இரண்டாவது அலை இன்னும் உச்சம் தொடலாம். அதன் பின் கொரோனா பரவல் குறைந்து, மீண்டும் அதிகரிக்கும். இதையே மூன்றாவது அலை என்கிறோம். இந்தியாவில் நிச்சயம் மூன்றாவது அலை வீசும். ஆனால், எப்போது என்று கூறுவது சிரமம். மக்கள் சுயகட்டுப்பாடுகளுடன் இருந்தால் மூன்றாம் அலையின் தாக்கம் காலதாமதமாக வரலாம்.

COVID-19
COVID-19
AP Photo / Rafiq Maqbool

பொதுவாகக் கூறப்படும் கருத்தான `மூன்றாம் அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்' என்பது, முதியவர்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதையும் அல்லது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள் என்பதையும் பொறுத்தே சொல்லப்படுகிறது. இப்போது 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு அனுமதித்துள்ளதால் மூன்றாம் அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாகச் சொல்ல முடியாத ஒன்றே" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு