பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் உபாதைகளில் ஒன்று, இருமும்போதும் தும்மும்போதும் கட்டுப்பாடில்லாமல் சிறுநீர்க் கசிவது. வெளியில் சொல்ல முடியாத இந்த அவஸ்தையை காலம் முழுவதும் நிறைய பெண்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.

உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளானவர்கள், சர்க்கரைநோய் மற்றும் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சிறுநீர்க் கசிதல் பிரச்னை ஏற்படலாம். ஆண், பெண் இருபாலருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும் என்றாலும், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் தசைத் தளர்வு காரணமாக பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். தவிர, மெனோபாஸ் காலத்திலும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. “சிறுநீர்க் கசிவு, அபாயமில்லாத தொந்தரவுதான் என்றாலும், அது தரும் அசௌகர்ய உணர்வு மிகவும் எரிச்சலைத் தரும். இதற்குப் பெரிய சிகிச்சைகளையெல்லாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சிறு பயிற்சிகள் மூலம் சரிசெய்துவிடலாம்’’ என்கிறார் மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

``நம் உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் இருந்தாலும் இரண்டு சிறிய தசைகளே மிக முக்கியமானவை. ஒன்று, நம்மை உயிரோடு வாழவைக்கும் இதயத்தசை. மற்றொன்று, நம்மை முகச்சுழிப்பின்றி வாழவைக்கும் ஆசனவாயைச் சுற்றியுள்ள தசை (Pelvic Muscle). இவ்விரண்டின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். பிரசவகாலத்தில் பெண்களுக்கு உடலிலுள்ள அத்தனை தசைகளும் தளர்ச்சியடையும். அதிலும் ஆசனவாயைச் சுற்றியுள்ள இடுப்புத் தசைகள் அதிகமாகத் தளர்வடையும். அதனால்தான் சில நேரங்களில் கட்டுப்பாடில்லாமல் சிறுநீர்க் கசிவு, வாயு பிரிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றை ‘கெகல் பயிற்சி’யின் (Kegel Exercise) மூலம் எளிதாகச் சரிசெய்துவிடலாம்.

ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரத்தசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி, பின் தளர்த்துவதுதான் கெகல் பயிற்சி. மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் மற்றும் மூத்திரத்தசை ஆகிய இரண்டையும் சுருக்க வேண்டும். 5-10 விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேற்றித் தளர்த்த வேண்டும். எளிமையாகச் சொல்வதென்றால், சிறுநீர் முட்டிக்கொண்டு வரும்போது, கழிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனால் அடக்குவோமே... அப்படித்தான். ஆனால், சிறுநீர் வரும்போது இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது. சிறுநீர்த்தொற்று உண்டாகும். முழுமையாக சிறுநீர், மலம் கழித்த பிறகே செய்ய வேண்டும். அப்போதுதான் இடுப்புத்தசை நன்றாக இறுக்கமடையும். சிறுநீர்ப்பையும் மலக்குடலும் கீழ் இறங்காமல் இருக்கும். படிக்கும்போதோ, பயணம் செய்யும்போதோகூட இந்த எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம். இன்னும் சுலபமாக காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்னர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இந்தப் பயிற்சியைச் செய்யலாம். படுத்துக்கொண்டும் செய்யலாம். ஒவ்வொரு முறையும் பத்து தடவை என, ஒரு நாளைக்கு 30 முறை செய்ய வேண்டும். தசைகள் இறுக்கமடைவதை, பயிற்சி செய்பவர்களால் உணர முடியும். இந்தப் பயிற்சியை தொடர்ச்சியாகச் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்’’ என்கிறார் சசித்ரா தாமோதரன்.