Published:Updated:

உணவுகொடுத்த போலீஸுக்கு எச்சரிக்கை! - சமூக விலகலை சொல்லிக் கொடுக்கும் கேரள நபர்

கேரளா

தனிநபர் சுகாதாரம் மற்றும் சமூகவிலகலைக் கடைப்பிடித்தால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு முன்னெடுத்து வருகிறது.

உணவுகொடுத்த போலீஸுக்கு எச்சரிக்கை! - சமூக விலகலை சொல்லிக் கொடுக்கும் கேரள நபர்

தனிநபர் சுகாதாரம் மற்றும் சமூகவிலகலைக் கடைப்பிடித்தால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு முன்னெடுத்து வருகிறது.

Published:Updated:
கேரளா

கேரளாவில் வீடற்ற நபர் ஒருவருக்கு காவலர்கள் உதவ முற்பட்டபோது அந்த நபர் முன்னெச்சரிக்கையுடன் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடைக்காரர் ஒருவர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாட்டில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தனிநபர் சுகாதாரம் மற்றும் சமூகவிலகலைக் கடைப்பிடித்தால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு முன்னெடுத்து வருகிறது. அரசின் இந்த பிரசாரம் பொதுமக்களை சென்றடைந்ததற்கு சாட்சியாக இந்தச் சம்பவ நடந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஆதரவற்ற நபர் ஒருவர் வீடற்ற நிலையில் பூட்டப்பட்டிருந்த கடையின் வாசலில் தஞ்சமடைந்திருந்தார். லாக்டவுன் காரணமாக உணவு இன்றி தவித்து வந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூவர் அந்த நபரை விசாரித்துள்ளனர். ஆதரவற்ற நிலையில் உணவின்றி தவித்து வருவதாகக் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனிதாபிமானம் கொண்ட காவலர்கள் உணவு, தண்ணீரை வாங்கி வந்து அவருக்குக் கொடுத்துள்ளனர். அப்போதுதான் அந்தக் காட்சி நிகழ்ந்துள்ளது. பசி கண்ணை மறைக்கும் எனப் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அங்கு அப்படி நடக்கவில்லை. அந்த நபரின் செயலில் போலீஸார் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

சிசிடிவி
சிசிடிவி

சிசிடிவி காட்சி பதிவுகளில் இருந்து, ``சவரம் செய்யாத முகம்... அழுக்குப்படிந்த ஆடைகளுடன் ஒருநபர் ஒரு சிறிய சந்தில் இருக்கும் கடை (பழைய இரும்பு கடையாக இருக்கலாம்) முன்பு படுத்துக்கொண்டிருக்கிறார். அட்டைப்பெட்டி குவியல்களுக்கு அருகே கால்களை மடக்கிப் படுத்திருக்கிறார் அந்த நபர். ரோந்து காவலர்கள் வந்து அந்த நபரை விசாரிக்கின்றனர். சைகையால் உணவு சாப்பிட்டாயா எனக் கேட்க இல்லை, அடிவயிற்றில் கைவைத்து இல்லை எனப் பதிலளிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவலர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். சிறுது நேரம் கழித்து கையில் உணவுப் பொட்டலம் மற்றும் தண்ணீருடன் வந்த காவலர்கள் அந்த நபரை அழைக்கின்றனர். காவலர்களின் குரலைக் கேட்டு திரும்பினார். கைகளில் இருந்த உணவுப் பொட்டலத்தை நீட்ட வேகமாக ஓடிவந்த அந்த நபர் காவலரைத் தள்ளிப்போகுமாறு எச்சரித்தார். காரணம் புரியாமல் அவர்கள் நிற்க கற்களை எடுத்துக்கொண்டு முன்னேறினார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் சற்று பின்வாங்கினர்.

அந்த நபர் தரையில் ஒரு வட்டம் போன்று வரைந்துவிட்டு உணவுப்பொட்டலத்தை அங்கே வைக்குமாறு கூறிகிறார். போலீஸார் உணவுகளை அங்கே வைத்துவிட்டு திரும்ப அதன் பின்னர் அதனை எடுத்துக்கொண்டார்” இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த நபரின் செயலை பலர் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism