Published:Updated:

கொரோனாவை விரட்டிய கொடைக்கானல்! -ஒற்றுமை வென்ற கதை...

அரசு, பொதுமக்கள் ஒத்துழைப்பு, தற்சார்பு வாழ்க்கை முறை, சூழல் ஆகியவை காரணமாகக் கொரோனா இல்லாத பகுதியாக இருக்கிறது கொடைக்கானல்.

கொரோனா நோய்த் தொற்றால் உலகமே உயிர் பயத்தில் அலறிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் இல்லங்களில் தனித்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் 3 வது மாநிலம் என்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று தாக்காத பகுதி ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தமிழக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 5 வது இடத்தில் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் அந்தப் பகுதி இருப்பதுதான் ஆச்சர்யத்தின் உச்சம்.

மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி.
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி.

அது கொடைக்கானல்தான். உலக பிரசித்திபெற்ற கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் கீழ்ப் பகுதியைவிட வெப்பம் குறைந்த பகுதி. அதனால் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டது மாவட்ட நிர்வாகம். மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி, அங்குள்ள நிலவரத்தைத் தினமும் கேட்டு, அதிகாரிகளுக்குரிய ஆலோசனைகளை வழங்கி வந்தார். அதன் விளைவாகத் தற்போது கொரோனா தொற்று தாக்காமல் பாதுகாப்பாக இருக்கிறது கொடைக்கானல். இதற்குக் காரணம் அங்கு அரசு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கை, பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் அங்குள்ள மக்களின் உணவுப் பழக்கம் ஆகியவைதான் கொரோனாவிலிருந்து தற்காத்து வருகிறது என்கிறார்கள்.

உலகளவில் சிறந்த சுற்றுலாத்தலமாக மலைகளின் இளவரசியாக இருப்பதால், வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் நடமாட்டம் அதிகம் இருக்கும். ஆனால், கொரோனா அறிகுறி ஏற்பட்டவுடன் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது மாவட்ட நிர்வாகம். கொடைக்கானலில் இருக்கும் அனைத்துச் சுற்றுலாத்தலங்களையும் உடனடியாக மூடியது. வெளியாட்கள் நகருக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஊருக்குத் திரும்பிய உள்ளூர்வாசிகள் 1200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தார்கள்.

சோதனைச் சாவடி
சோதனைச் சாவடி

தொடர் சோதனை, கண்காணிப்பு நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையின் துரித நடவடிக்கை, நோய்த் தொற்று யாருக்கும் இல்லை என்பதை உறுதி செய்தது. ஆக, கொடைக்கானல் மலையில் கொரோனா தாக்குதல் இல்லை. அரசு அதிகாரிகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல், வாழ்வியல் முறைகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து, இந்தக் கொடும் நோய்த் தொற்றை தோல்வியடைய வைத்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொடைக்கானல் மலையில் பூண்டு, மிளகு, இஞ்சி விளைகிறது. அங்குள்ள மக்களின் தினசரி உணவில் இவை மூன்றும் கட்டாயம் இருக்கும். அத்துடன் கொடைக்கானல் மலைப்பகுதியில் 266 வகையான மூலிகைகள் வளர்வதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இங்கு விளையும் கடுக்காய், தான்றிக்காய் ஆகியவையும் சிறந்த மருந்துப்பொருள்கள். அத்துடன் மேல்மலை கிராம மக்கள் இன்றுவரை தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தையும் அவர்களே விளைவித்துக்கொள்கிறார்கள்.

சோதனைச் சாவடி
சோதனைச் சாவடி
கொடைக்கானல்
கொடைக்கானல்

கொடைக்கானல் பகுதியில் விளையும் பூண்டு மருத்துவக் குணம் மிக்கது. இந்தப் பூண்டை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இந்த மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் தனிச்சிறப்புக்காக கொடைக்கானல் பூண்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி உணவே மருந்தாக வாழும் கொடைக்கானல் மக்கள், அரசு நிர்வாகம், அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கொரோனாவையே விரட்டியுள்ளது நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமே..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு