Published:Updated:

கொரோனா இறப்புக்கு காரணமாகுமா வைட்டமின் டி குறைபாடு?.. மருத்துவர்கள் சொல்வது என்ன?!

இறப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

கொரோனா இறப்புக்கு காரணமாகுமா வைட்டமின் டி குறைபாடு?.. மருத்துவர்கள் சொல்வது என்ன?!

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

Published:Updated:
இறப்பு

ஆறு மாதங்களைக் கடந்த நிலையிலும் மருத்துவ உலகால் இன்னும் கொரோனாவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உலக அளவில், இந்நோய் குறித்து பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள ஈஸ்ட் அங்கிலியா ( East Anglia university) பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட குயின் எலிஸபெத் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி!
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி!

ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் உடலில் உள்ள சராசரி வைட்டமின் டி அளவின் அடிப்படையில், அந்த நாடுகளில் ஏற்பட்ட கொரோனா மரண விகிதம் ஒப்பிடப்பட்டது. மேலும், சூரிய ஒளி குறைவாக உள்ள நாடுகளில் இந்த பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வைட்டமின் டி குறைபாட்டுக்கும் கொரோனா மரணங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று மருத்துவர்களிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முடநீக்கியல் மருத்துவர் நந்தகுமார் சுந்தரம்:

"வைட்டமின் டி குறைபாடு உள்ள கொரோனா நோயாளிகள் இறக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுவது உண்மைதான். காரணம், எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் வைட்டமின் டி-க்கு பங்குண்டு. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வைட்டமின் டி, கொழுப்பில் கரையும் தன்மை உடையது. அது கல்லீரல், சருமம், சிறுநீரகம் ஆகியவற்றில் உற்பத்தியாகும். பால், சீஸ், முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு, மீன், சிக்கன்,காளான், நட்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் டி சத்து உள்ளது.

முடநீக்கியல் மருத்துவர் நந்தகுமார் சுந்தரம்
முடநீக்கியல் மருத்துவர் நந்தகுமார் சுந்தரம்

இந்தியாவில், வைட்டமின் டி குறைபாடு பரவலாக இருப்பதற்குக் காரணம் RO வாட்டர் பயன்பாடு அதிகமாக உள்ளதே. குடிநீரை எதிர் சவ்வூடு பரவுதல் (reverse osmosis) முறைக்கு உட்படுத்துவதால் தண்ணீரில் உள்ள சத்துகள் நீங்கிவிடுகின்றன. சத்து இல்லா நீரைக் குடிப்பதால் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு, ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் மென்மையாகும் பிரச்னை ஏற்படும். நிலத்தடி நீரை காய்ச்சி வடிகட்டி குடிப்பதே சிறந்தது. இந்தியாவில் எளிதாகக் கிடைக்கும் பிரண்டையில், வைட்டமின் டி சத்து நிறைந்தது. எலும்பு மற்றும் தசை நலனை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் பிரண்டை, தற்போது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் டி3 குறைபாடு இருந்தால், அதைச் சமன்படுத்துவது அவசியம். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறு உள்ளவர்கள், வைட்டமின் டி சத்தை சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்வது மிக அவசியம். வைட்டமின் டி சத்தை இயற்கையாகப் பெற ஒரே வழி, சூரிய ஒளி. தினமும் காலையிலும் மாலையிலும் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி சில நிமிடங்கள் இருப்பது நல்லது. விளம்பரங்களில் கூறுவதுபோல சோப்பு மற்றும் லோஷன்களின் மூலமெல்லாம் வைட்டமின் டி சத்தைப் பெற முடியாது என்கிறார் மருத்துவர் நந்குமார் சுந்தரம்.

பொது மருத்துவர் பத்மா
பொது மருத்துவர் பத்மா

பொது மருத்துவர் பத்மா:

''கொரோனாவால் மரணம் ஏற்படுவதற்கு, அவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் சர்க்கரைநோய் போன்ற நாள்பட்ட நோய்களே முக்கியக் காரணம். வைட்டமின் டி குறைபாட்டுக்கும் இறப்புக்கும் சம்பந்தமில்லை. ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் பெருக்கம் அதிகமாகி, சைட்டோகைன் சுழல் ( Cytokine storm) ஏற்படும்போதுதான் மரணம் நிகழ்கிறது. சைட்டோகைன் என்பது செல்களுக்கிடையேயான சமிக்ஞைகளுக்குத் தேவைப்படும் சிறிய புரதங்கள் ஆகும். தீவிர தொற்று ஏற்படும்போது இவற்றின் எண்ணிக்கை அதிகமாவதே சைட்டோகைனின் சுழல். சைட்டோக்கைன் சுழலின்போது ஆக்சிஜனேற்ற அயற்சி ( oxidative stress) ஏற்பட்டு, செல்கள் திசுக்களும் சேதமடைந்து உயிரிழப்பு ஏற்படும். கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் இறக்க இந்தச் சுழல்தான் மூல காரணமாக உள்ளது. அதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர் பரிந்துரையுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான ஸிங்க், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஆகியவற்றுடன் தேவைப்பட்டால் வைட்டமின் டி மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்" என்று கூறினார்.