Published:Updated:

லட்சத்தீவில் முதல் கொரோனா தொற்று... கப்பல் பயணிகள் மூலம் பரவியதா?

லட்சத்தீவு
லட்சத்தீவு

கடந்த ஜனவரி 3-ம் தேதி அன்று கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு புறப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று உலகெங்கிலும் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வரும் வேளையில் இதுவரையில் கொரோனா தொற்று இல்லாத யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டு அத்தீவு மக்களிடையே பீதியை ஏற்ப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

கடந்த ஜனவரி 3ம் தேதி அன்று கொச்சியிலிருந்து லட்சத்தீவிற்கு புறப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது இது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சமையல்காரர் எனவும் அந்த நபருடன் கப்பலில் பயணித்து லட்சத்தீவு வந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளனர்.அதில் 31 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டதில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அவர்கள் சிறப்பு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய அரசின் மத்திய சுகாதார அமைச்சகம் சிறப்பு மருத்துவக் குழுவை லட்சத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்களுடன் புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த குழுவினரும், இந்திய குடும்ப நலத்துறை அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். மேலும் போக்குவரத்து உள்ளிட்ட உள்ளூர் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக லட்சத்தீவு நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள லட்டச்தீவு அரசு லட்சத்தீவு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என உறுதியான பின்பு மட்டுமே அந்நியர்கள் வரலாம் என அரசு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

corona virus
corona virus
Pixabay

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், மேலும் தொற்று பரவாமல் சிறப்பு மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் லட்சத்தீவு அரசு தெரிவித்துள்ளது.

லட்சத்தீவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அது பரவுவதைத் தவிர்க்க அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய மருத்துவ சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இ பாதுகாப்பபாக இருப்பதே பரவலை தடுப்பதற்கான வழி என்பதை உணர்வோம்.

- ப.கா.ரேவந்த் ஆண்டனி

அடுத்த கட்டுரைக்கு