Published:Updated:

`கொரோனா அச்சம்... ஹேண்ட்ஷேக் வேண்டாம்... லெக்‌ஷேக் கொடுப்போம்!' - வைரலாகும் சீன வீடியோ

லெக்‌ஷேக்
லெக்‌ஷேக்

தன் காலை நீட்டி மற்றவர்களின் காலில் முட்டி வரவேற்று தன் அன்பை பகிர்ந்துகொள்கிறார்.

கொரோனா... இந்தப் பெயரைக் கேட்டு அலறாத உலக நாடுகள் இல்லை. சீனாவில் தொடங்கி அமெரிக்கா, இரான், இந்தியா என உலகின் எல்லா திசைகளிலும் பரவி பல்லாயிரக்கணக்கில் மக்களைப் பாதித்துவருகிறது இந்த வைரஸ். கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகியுள்ளது. குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்த வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாஜ்மகாலை மூடச் சொன்னது முதல் பயோமெட்ரிக் சிஸ்டத்துக்கு தற்காலிகத் தடை வரை...  கொரோனா அப்டேட்ஸ்!

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த வைரஸ் பரவல், முதற்கட்டமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இருமல், தும்மலின்போது வெளியாகும் நீர்க்குமிழிகள் மூலம் பரவும். அதேபோல் கைகுலுக்குதல் மூலமும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா
கொரோனா

இந்த வைரஸ் பொதுவாக, பாதிக்கப்பட்டவரிடமிருந்து நாம் அன்றாடம் புழங்கும் இடங்களுக்குப் பரவி, பல நாள்கள் உயிர் வாழும். உதாரணமாக, கதவின் கைப்பிடி, லிஃப்ட் பட்டன்கள் என இந்த வைரஸ் எங்கு வேண்டுமானாலும் உயிர் வாழும். பொதுவாக, சாதாரண வெப்பநிலையில் சில மணி நேரம்வரை இது வாழும். குளிரான வெப்பநிலையில் இன்னும் அதிகநேரம் இந்த வைரஸ் இருக்கும். அதிக வெப்பநிலையில் குறைவான நாள்களே வாழும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மருத்துவர்கள், சுற்றுப்புறத்தை ஈரமில்லாமல் கதகதப்புடன் வைத்துக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் சீனர் ஒருவர் பதிவிட்ட காணொளியில், மூன்று நண்பர்கள் ஒரு பொது இடத்தில் சந்திக்கின்றனர். அதில் ஒருவர் மற்றவர்களுக்குக் ஹேண்ட்ஷேக் கொடுக்க கைநீட்டுகிறார். அதை நிராகரிக்கும் மற்றொருவர், பின்னர் தன் காலை நீட்டி மற்றவர்களின் காலில் முட்டி வரவேற்று தன் அன்பை பகிர்ந்துகொள்கிறார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

அதேபோல் மற்றொரு காணொளியில் சீன இளைஞர் ஒருவர் பிறரை கைகுலுக்கி வரவேற்காமல், காலால் முட்டி வரவேற்கிறார்.

கொரோனா அச்சம்... மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்லும் நோயாளிகள்!

முன்னதாக சீனாவில் பெண் செவிலியர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாகத் தன் குழந்தையைத் தொட்டுத் தூக்கக்கூட முடியாமல் தூரத்தில் நின்று அழுது தன் அன்பை வெளிப்படுத்தும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது இந்த 'லெக் ஷேக் ' காணொளி வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு