Published:Updated:

`எல்லோரையும் போல பயப்பட்டோம், ஆனால்?' - மதுரை கொரோனா வார்டை அசத்திய 3 சகோதரிகள்

அமுதா, முத்துமீனா, தவமணி
அமுதா, முத்துமீனா, தவமணி

`மக்களுக்கு சேவையாற்றத்தானே இந்தப் பணிக்கு வந்தோம். அதனால் சாதாரண காலம், கொரோனா காலம் என்ற வேறுபாடு தெரியவில்லை' என்கின்றனர் செவிலியர்கள்.

கொரோனா தொற்று எனச் சந்தேகம் வந்துவிட்டாலே நெருங்கிய உறவினராக இருந்தாலும் விட்டு விலகிவிடும் இன்றைய சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு உற்சாகமாக சேவையாற்றி வரும் மூன்று செவிலியர்களை மதுரை மக்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளார்கள். காரணம், அவர்கள் மூவரும் சகோதரிகள் என்பதுதான்.

செவிலியர்கள்
செவிலியர்கள்

மதுரையைச் சேர்ந்த அமுதா, முத்துமீனா, தவமணி ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகிறர்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியவுடன் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இம்மூவரும் ஒரே நேரத்தில் பணியமர்த்தப்பட்டார்கள்.

தற்போது அவர்களின் பணி நாள்கள் முடிந்து தனிமைப்படுத்தப்பட்ட பின் ஓய்வுக்காக வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு உறவினர்களும் தெருவாசிகளும் உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர். இந்தத் தகவல் மேலும் பரவியதால் சகோதரிகள் மூவரையும் நேரிலும் அலைபேசியிலும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அமுதா, முத்துமீனா, தவமணி
அமுதா, முத்துமீனா, தவமணி

சகோதரிகளில் மூத்தவரான அமுதாவிடம் பேசினோம், ''நாங்கள் எப்போதும் போலத்தான் வேலைக்குச் சென்று வந்தோம். இன்னைக்கு எல்லோரும் பாராட்டுவதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. முதலில் கொரோனா சிகிச்சை வார்டில் எங்களைப் பணியமர்த்தியபோது எல்லோரையும் போல எங்களுக்கும் அச்சம் இருந்தது.

மருத்துவர்கள், மற்ற ஊழியர்களைப் பார்த்த பின்பு இதுவும் வழக்கமான பணிதான் என்று நினைத்து பணியாற்றினோம். நாங்கள் பாதுகாப்பாகப் பணியாற்ற எங்களுக்குத் தேவையானதை மருத்துவமனையில் செய்து கொடுத்தார்கள். மக்களுக்கு சேவையாற்றத்தானே இந்தப் பணிக்கு வந்தோம். அதனால் சாதாரண காலம், கொரோனா காலம் என்ற வேறுபாடு தெரியவில்லை'' என்றவரிடம்,

குடும்பத்தினருடன்
குடும்பத்தினருடன்

''சகோதரிகள் மூவரும் செவிலியர் பணியைத் தேர்வு செய்தது எப்படி?'' என்றோம்.

கொரோனா: புதிதாக 2,532 பேருக்கு பாதிப்பு! தமிழகத்தில் 60,000-த்தை நெருங்கும் மொத்த எண்ணிக்கை #NowAtVikatan

''எங்கள் அம்மா மூத்த செவிலியராக இதே மருத்துவமனையில் பணியாற்றினார். சின்ன வயதில் செவிலியர் பணியைப் பற்றி உயர்வாக எங்களிடம் சொல்லி வருவார். அதனால் அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் படித்து முடித்தவுடன் முதலில் நானும் என்னைத் தொடர்ந்து என் தங்கைகளும் பணியில் சேர்ந்தார்கள். இப்போது கொரோனா சிறப்பு வார்டில் ஒன்றாகப் பணியாற்றும் வாய்ப்பையும் இப்பணி எங்களுக்கு கொடுத்துள்ளது'' என்றார் உற்சாகமாக.

அமுதா, முத்துமீனா, தவமணி
அமுதா, முத்துமீனா, தவமணி

இக்கட்டான இந்த நேரத்தில் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அர்ப்பணிப்போடு பணியாற்றும் வெள்ளுடை தேவைதைகளான சகோதரிகளை நாமும் வாழ்த்துவோம்.

அடுத்த கட்டுரைக்கு