Published:Updated:

மதுரை:`என்ன நோய்ன்னே தெரியல; 17 வருஷமா இதே நிலைமதான்!’ - விநோத நோயால் கலங்கும் இளைஞர்

நோயால் பாதிகப்பட்ட தமிழரசன்

இந்த நோயால்தான் பாதிச்சிருக்கானு எந்த டாக்டரும் கண்டுபிடிக்க முடியல. அவனுக்கு யாராச்சும் கண்டிப்பா உதவி செஞ்சா நல்ல நிலைமைக்கு வந்திடுவான்" என்றார் நம்பிக்கையாக.

மதுரை:`என்ன நோய்ன்னே தெரியல; 17 வருஷமா இதே நிலைமதான்!’ - விநோத நோயால் கலங்கும் இளைஞர்

இந்த நோயால்தான் பாதிச்சிருக்கானு எந்த டாக்டரும் கண்டுபிடிக்க முடியல. அவனுக்கு யாராச்சும் கண்டிப்பா உதவி செஞ்சா நல்ல நிலைமைக்கு வந்திடுவான்" என்றார் நம்பிக்கையாக.

Published:Updated:
நோயால் பாதிகப்பட்ட தமிழரசன்

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ளது குமாரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (35), பத்தாவது வரை படித்துள்ளார். எந்த ஒரு தீய பழக்கங்களும் இல்லாத இவர் படிப்பை முடித்து மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டயர் தயாரிக்கும் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற சில மாதங்களிலேயே இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றுள்ளது.

விநோத நோயால் பாதிக்கப்பட்ட தமிழரசன்
விநோத நோயால் பாதிக்கப்பட்ட தமிழரசன்

பின்னர் ஓய்வு எடுத்துக்கொண்டு மருத்துவம் பார்த்துவரும் இவர், 17 ஆண்டுகளுக்கும் மேல் என்ன நோய் என்றே கண்டறிய முடியவில்லை சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார் என்பதே வேதனையான விஷயம். தமிழரசன், ``நான் பள்ளிக்கூடம் படிக்கும்போதெல்லாம் எல்லாரையும் போல நல்லாதான் ஓடி, ஆடி விளையாண்டேன். வேலைக்குப் போன 5 மாசத்தில்தான் எனக்கு இப்படி ஆயிருச்சு. சரி காய்ச்சல் மாதிரி வந்து போயிடுனும் நினைச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்ப வரைக்கும் இந்த பாழாப் போன நோய் என்ன வாழவும் விடமாட்டிங்குது, சாகவும் விடமாட்டீங்குது. தனியார் ஆஸ்பத்திரி, பெரியாஸ்பத்திரி எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்துட்டேன். கொஞ்ச நாளையில் சரியாகிடும்னு சொன்னாங்க. ஆனா, 17 வருஷமா இதே நிலைமதான் எனக்கு. என்ன நோய் வந்துருக்குனே டாக்டர்களுக்குத் தெரியல. ஸ்கேனு, ரத்த டெஸ்டுனு எல்லாமே பாத்துட்டாங்க. காசு செலவானதுதான் மிச்சம்.

வீட்டின் வெளியே
வீட்டின் வெளியே

அப்பா, அம்மா ரெண்டு பேரும் கூலி வேலைதான். அவங்களையும் ஏன் கஷ்டப்படுத்தணும்னு இப்பெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போறதில்லை. வலி மாத்தர மட்டும்தான் எடுத்துக்கிறேன். என்னால ரெம்ப நேரம் நிக்க முடியாது. உட்கார முடியாது. அதிகமா படுக்கதான் சொல்லும். எனக்கு உடம்புவேற வளைஞ்சுக்கிட்டே போகுது. ஏன் அப்டி ஆகுதுனும் தெரியல. இந்த பிரச்னைனால உட்கார்ந்துகூட பாத்ரூம் போக முடியாது. அவ்வளவு கஷ்டம். என் கூட பிறந்த அண்ணன், தம்பி ரெண்டு பேரும் இறந்துட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருக்க நானும் முதுகு வளைஞ்சு போய் யாருக்கும் உதவி இல்லாம கிடக்குறேன். எனக்கு இந்த நோயில இருந்து மீண்டு வர மாட்டோமானு தோணிகிட்டே இருக்கு. எனக்கு யாராச்சும் மருத்துவ உதவி செஞ்சு காப்பாத்தணும். எனக்கு என்ன நோய்னு கண்டுபிடிக்கணும். எனக்கு வந்த நோய் யாருக்கும் இனி வரக் கூடாது" என்று தன் சட்டைத் துணியால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

தமிழரசன்
தமிழரசன்

தமிழரசன் வீட்டின் அருகே உள்ள நடராஜன், " தம்பி தமிழ் ரொம்ப நல்ல பையன். இந்த நோயால்தான் பாதிச்சிருக்கானு எந்த டாக்டரும் கண்டுபிடிக்க முடியல. அவன் கூட பிறந்த ரெண்டு பேரும் ஆக்சிடன்டல இறந்துட்டாங்க. அம்மா, அப்பாவும் முடியாதவுங்க. அவங்க அவன் மூத்த மகனின் பேரனையும் கவனுச்சுக்கிறாங்க. தமிழின் வாழ்க்கை மிகவும் கொடியது. அவனுக்கு யாராச்சும் கண்டிப்பா உதவி செஞ்சா நல்ல நிலைமைக்கு வந்திடுவான்" என்றார் நம்பிக்கையாக.

பாதிக்கப்பட்ட தமிழரசனுக்கு மருத்துவ உதவி செய்ய help@vikatan.com என்ற மின் அஞ்சலை தொடர்புகொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism