Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: 2-வது டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு உயிரிழந்த நபர்... என்ன நடந்தது?

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo / Manish Swarup )

ஒரு மாதத்திற்கு முன்பு சுக்தேவ் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்ட நிலையில், நேற்று இரண்டாவது டோஸை எடுத்துள்ளார்.தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 45 வயதான சுக்தேவ் கிர்தாத், நேற்று கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்தில் மரணமடைந்துள்ளார்.

பிவான்டி பகுதியைச் சேர்ந்த சுக்தேவ், கண் மருத்துவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு சுக்தேவ் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்ட நிலையில், நேற்று இரண்டாவது டோஸை எடுத்துள்ளார்.தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

Corona Vaccine
Corona Vaccine
AP Illustration/Peter Hamlin
ரிவர்ஸ் க்வாரன்டீன், மீண்டும் லாக்டௌன்... சரியான பாதையில்தான் செல்கிறதா இந்தியா? #COVID19

எனவே அவரை அருகில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்கு சோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சுக்தேவ் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். சுக்தேவின் மரணத்திற்கான காரணம் இன்னும் அறியப் படவில்லை என்றும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் காரணம் தெரியும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

மேலும் சுக்தேவை பரிசோதித்த மருத்துவர் கே.ஆர்.கரத் கூறுகையில்,

”அவர் ஒரு மாதத்திற்கு முன்பு முதல் டோஸை எடுத்துக் கொண்டார், அதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டாவது டோஸை செலுத்துவதற்கு முன்பு அவரை முழு பரிசோதனை செய்தோம். அவருக்கு பல ஆண்டுகளாக ரத்த அழுத்தம் இருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு கால் வீக்கம் இருந்தது. பரிசோதிக்கும்போது அவரது பிளட் பிரஷர் (பிபி) அளவும் ஆக்ஸிஜன் அளவும் இயல்பாகத்தான் இருந்தன. மரணத்திற்கான காரணம் எதுவென்று துல்லியமாகக் கூறுவது சற்று கடினம். அவரின் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் மரணத்திற்கான காரணத்தை கூற முடியும்" என்றார்.

New corona virus
New corona virus
Pixabay

60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணைநோய்கள் உள்ள 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் சுற்று என்ற அடிப்படையில் சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மகாராஷ்டிராவில் 33,044 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முந்தைய நாளை விட நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் எனினும் கடந்த வாரத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு