Published:Updated:

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

நித்ய கல்யாணி
பிரீமியம் ஸ்டோரி
நித்ய கல்யாணி

பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் கட்டுப் பிரச்னை அடிக்கடி வரும். மல்லிகை அல்லது முல்லையை அரைத்து மார்பில் பற்றுப்போட பால் கட்டு கரையும்.

 மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

மருத்துவ குணங்கள் உள்ள தாவரங்களைத் தேடி அமேசான் காட்டுக் கெல்லாம் போக வேண்டாம். நமக்கு எளிதாகக் கிடைக்கும் செடிகளும் மலர்களும் மருத்துவ குணங்கள் கொண்டவைதான். நமக்கு எளிதாகக் கிடைக்கிற மலர்கள் சிலவற்றின் மருத்துவ குணங்களை பகிர்ந்து கொள்கிறார் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

தாமரையும் தாமரைத்தண்டும்..!

வெண் தாமரை மூளைக்கும், செந்தாமரை இதய வலுவுக்கும் நல்லது. கஷாயம் வைத்து 15 மில்லி வரை அருந்தலாம். தாமரைத்தண்டுக்கு கர்ப்பபையை வலுப்படுத்தும் தன்மை உண்டு.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

ஆவாரம்பூவும் நீரிழிவும்..!

நீரிழிவுக்கான சூரணத்தில் ஆவாரம்பூவையும் சேர்க்கிறோம். காய்ச்சிய பசும்பாலில் இரவு முழுக்க ஆவாரம்பூவை ஊறவைத்துக் குடித் தால் வெள்ளைப்படுதல் சரியாகும்.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

புண்களை ஆற்றும் செம்பரத்தம் பூ!

நாம் செம்பருத்தி என்று சொல்லிக் கொண்டிருப்பது உண்மையில் `செம்பரத்தம் பூ'. செம்பருத்தி என்பது சிவப்பு நிற பூக்களைக் கொண்ட பருத்திச் செடியைக் குறிப்பிடுவது. செம்பரத்தம்தான் ஹைபிஸ்கஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இது இதயநோயை குணப்படுத்தும் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இந்தப் பூக்களில் இருக்கிற வழுவழுப்புத்தன்மை வாய், குடல், கர்ப்பபைப் புண்களை குணப் படுத்தும். ஒற்றையடுக்கு செம்பரத்தம் மட் டுமே மருத்துவ குணம் கொண்டது. மருந் தடிக்காத மலர்கள் என்றால் ஒன்றிரண்டை அப்படியே சாப்பிடலாம்.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

கண்களுக்கு நந்தியாவட்டையும், வேப்பம்பூவும்!

கண்கள் சிவந்து இருத்தல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு நந்தியா வட்டை மலர் சிறந்த மருந்து. எறும்புகள் இல்லாமல் சுத்தம் செய்த நந்தியாவட்டை பூக்களை கண்களின் மேல் வைத்து ஒரு துணியால் கட்டி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் விட்டுவிட வேண்டும். படிப்படி யாக பிரச்னை சரியாகிவிடும். வேப்பம்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்துவர கண் நோய் வராது; பார்வை கூர்மையாகும் என்று சித்தர் பாடல்கள் சொல்கின்றன.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

பாலூட்டும் தாய்மார்களுக்கு மல்லிகை!

பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் கட்டுப் பிரச்னை அடிக்கடி வரும். மல்லிகை அல்லது முல்லையை அரைத்து மார்பில் பற்றுப்போட பால் கட்டு கரையும். தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புகிறவர்களும் இந்தப் பற்றை மார்பில் போட்டுக்கொள்ளலாம். ஆனால், பச்சை வண்ணமேற்றிய பூக்களைப் பயன் படுத்தக்கூடாது.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

மலச்சிக்கலுக்கு மருந்தாகும் பன்னீர் ரோஜா!

பன்னீர் ரோஜாக்களில் செய்யப்படுகிற குல்கந்து வயிற்றுப்புண்ணை ஆற்றும்; மலச் சிக்கலைத் தீர்க்கும்; மூலநோயை கட்டுக்குள் வைக்கும்; ரத்தச்சோகையை சரிசெய்யும்.

பல வண்ண ரோஜாக்களை எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது. நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் குல்கந்து சாப்பிடக் கூடாது. அதேபோல, பன்னீர் ரோஜா இதழ்களைச் சாப்பிடுவதற்கு முன்னால், அதன்மேல் எந்த பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

தூக்கத்துக்கு மருதாணிப்பூ!

தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள், மருதாணிப் பூக்களை உலர்த்தி தலையணை யாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம். மருதாணிப்பூவை ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் அம்மையால் வருகிற உடல் எரிச்சல் தணியும்.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

ஒற்றைத் தலைவலிக்கு நொச்சிப்பூ!

`மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள், நொச்சிப்பூக்களை உலர்த்தி தலையணையாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம். `அமீபியாசிஸ்' காரணமாக சீதபேதி வந்து அவஸ்தைப்படுபவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனையோடு நொச்சிப்பூ கஷாயம் அருந்தலாம்.

ரோஜா, மல்லிகை, தாமரை, நொச்சிப்பூ... மருந்தாகும் மலர்கள்!

நித்ய கல்யாணி... நேரடியாகச் சாப்பிடலாமா?

200 வருடங்களுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்த செடி இது. நித்ய கல்யாணிச் செடியிலிருந்து சத்துகளைப் பிரித்துதான் புற்றுநோய்க்கான மருந்தில் சேர்க்கிறார்கள். இந்த மலரை நேரடியாக மருத்துவத்தில் பயன்படுத்துவதில்லை. மற்ற பூக்களைப்போல இது நேரடியாகச் சாப்பிடக்கூடியதும் அல்ல.