Published:Updated:

மெனோபாஸ்... எலும்புகளை வலுவாக்க என்ன வழி?

மெனோபாஸ்
பிரீமியம் ஸ்டோரி
மெனோபாஸ்

பல பருவங்களைக் கடந்து வயது முதிர்வது போலவே, உடலில் பல்வேறு மாற்றங்களைக் கடந்து வரும் மற்றுமொரு மாற்றமே மெனோபாஸ்.

மெனோபாஸ்... எலும்புகளை வலுவாக்க என்ன வழி?

பல பருவங்களைக் கடந்து வயது முதிர்வது போலவே, உடலில் பல்வேறு மாற்றங்களைக் கடந்து வரும் மற்றுமொரு மாற்றமே மெனோபாஸ்.

Published:Updated:
மெனோபாஸ்
பிரீமியம் ஸ்டோரி
மெனோபாஸ்
மெனோபாஸ் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் 45 முதல் 55 வயதுக்குள் ஏற்படும் என்கிற நிலையிலிருந்து 40 வயதிலேயே நிகழத் தொடங்கிவிட்டது. இதற்கு காரணம், சத்தான உணவு எடுத்துக் கொள்ளாததும் உடல் உழைப்பு இல்லாததுமே. இந்தக் காலகட்டத்தில், பெண்கள் தம் உடல்மீது அதிக கவனம் செலுத்தி, மீத முள்ள காலத்தை நலமுடன் கழிக்க முயற்சி செய்ய வேண்டும்.

மெனோபாஸ் காலத்தில் பெண் உடலில் நிகழும் மாற்றங்கள், எலும்புகள் பலவீனமாவது, அதைத் தடுக்கும் வழிகள் என எல்லாவற்றையும் விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.சௌரிராஜன்

எஸ்.சௌரிராஜன்
எஸ்.சௌரிராஜன்

‘‘ஆயுர்வேதத்தில், பெண்களின் உடலியல் செயல்பாடுகள் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்படுகின்றன. குழந்தைப் பருவத்தில் கபமும், நடுத்தர வயதில் பித்தமும், முதுமையில் வாதமும் அதிகரித்துச் செயல் படும். மெனோபாஸ் காலம் என்பது பித்த காலச் சுழற்சியிலிருந்து வாத காலத்துக்கு மாறுவதாகும்.

ஈஸ்ட்ரோஜென் (Estrogen) புரொஜெஸ்ட் ரோன் (Progesterone) போன்ற ஹார்மோன் களின் துணையுடன் உடலில் நடைபெறும் மாற்றங்களின் மூலமே மாதவிடாய் ஏற்படு கிறது. மெனோபாஸுக்குப் பின் அவற்றின் அளவு குறைந்துவிடும். எலும்புகளுக்கு கால்சியம் எடுத்துக்கொள்ளும் தன்மை குறையும், எலும்பு வீக்கம், எலும்பு மெலிவு மற்றும் எலும்புகளில் மென் துளைகள் ஏற்பட்டு, எலும்புகள் மென்மையாகும்.

உதாரணத்துக்கு, புளியங்கொம்பு போல இருந்த எலும்புகள், முருங்கைக் கொம்பு களைப்போல மென்மையாகி உடையும் நிலை ஏற்படும். உடலில் ஈஸ்ட்ரோஜென் குறையக் குறைய எலும்புத் திசுக்களின் அடர்த்தி குறையும். இதனால் லேசாகத் தடுக்கி விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படும். இடுப்பு, கை, முதுகுத் தண்டு ஆகியவை பாதிக்கக்கூடும்.

தினசரி உடற்பயிற்சியும் உடல் உழைப்பும் கொண்டவர் களுக்கு, எலும்புகளில் வலிமையும் வளையும் தன்மையும் உண்டாவதால், இத்தகைய பாதிப்புகள் ஏற்படாது.

உடல் உழைப்பு இல்லையென்றால் உடல் பருமனாகிவிடும். எடை கூடுவதும் இதற்கு காரணமாகும்.

ஆர்ஓ வாட்டர் ஆபத்து!

நகரங்களில் வாழும் பெண்கள், அதிகம் மினரல் வாட்டர் அல்லது ஆர் ஓ வாட்டர்தான் குடிக்கிறார்கள். இந்தத் தண்ணீரில் மினரல்களும் பிற சத்துகளும் நீக்கப்படுவதால் உடலுக்கு எந்தச் சத்தும் கிடைப்பதில்லை. இதனால் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், எலும்பின் அடர்த்தியும் வழவழப்புத்தன்மையும் குறைகிறது. கிராமங்களில் வாழும் பெண்களுக்கு இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அவர்கள், சத்துகள் நீக்கப்படாத கிணற்று நீர், ஊற்று நீர், கண்மாய் நீரையே அருந்துகிறார்கள்.

10-க்கும் குறைவா... பத்திரமா பார்த்துக்கோங்க!

மெனோபாஸ்... எலும்புகளை வலுவாக்க என்ன வழி?

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 - 16 என்னும் அளவில் இருக்க வேண்டும். நிறைய பேருக்கு 10-க்கும் குறைவான அளவிலேயே இருப்பதும் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது. குறிப்பாக, ரத்தச் சோகை ஏற்படுகிறது.

அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால், சப்த தாதுக்களில் (ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்ர தாது ஆகியவையே ஏழு தாதுக்கள்) ரத்தம் குறையும். அப்படிக் குறைந்தால், மூட்டுகளுக்குள் உள்ள மஜ்ஜை சுருங்கும். அதனால் எலும்புத் தேய்மானம் ஏற்படும். சரியான நேரத்துக்கு சாப் பிடாத பெண்களுக்கும் சத்துக் குறைவு ஏற்படும்.

ஆயுர்வேத மருத்துவத் தின்படி, நாம் சாப்பிடும் உணவு முதலில் ரசம் என்கிற தாதுவாகி, ரத்தமாகிறது. ரத்தம் ஊறுகின்றபோது தசை வளரும். அதிலிருந்து கொழுப்பு உண்டாகி எலும்பை பலப்படுத்தும் அதன் மூலம் எலும்புகளின் இணைப்புகளில் மஜ்ஜை உருவாகும். அதிலிருந்து ஆண் உயிரணுக்கள் உருவாகும். பெண்களுக்கு கருமுட்டை உருவாகும். இவை உடலில் சரியாக இருக்கும்வரை அதாவது, சப்ததாதுக்கள் சரியாக இருக்கும்வரை உடலானது வலிமையோடு இருக்கும்.

இந்த உடல்வலிமை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு 40 வயது வரையே இருக்க லாம். சிலருக்கு 50 வயது வரையிலும்கூட இருக்கலாம். உடல்நலம், உடல்வாகு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட சில காரணிகளைப் பொறுத்து பெரும்பாலும் 55 வயது வரை இந்த உடல்வலிமை என்பது நீடிக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அபூர்வமாக 80 வயது வரையிலும்கூட உடல்வலிமையோடு இருப்பவர்களும் உண்டு. இதன் பிறகு, ஒவ்வொரு தாதுவாகக் குறைய ஆரம்பிக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் நின்று போகும் (ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியாகாது. ஆண்களுக்கான இந்த நிலையை ஆண்ட்ரோபாஸ் - `Andropause' என்பார்கள்). எலும்பு மஜ்ஜை குறைந்து எலும்புகள் தேய்மானம் அடையும். வலிமை குறையும். எலும்புகளில் சிறு துவாரங்கள் (ஆஸ்டியோபோரோஸிஸ்) ஏற்படும். அடுத்து, கொழுப்பு குறையும்.

இதனால் உடல் எடை குறையும். சருமம் சுருங்கும். சிலருக்கு கூன் விழும். ரத்தம் சுண்டும். ஹீமோகுளோபின் (HB) குறைந்துவிடும். அடிக்கடி தலைச் சுற்றல் ஏற்படும். ரத்த அழுத்தம் குறையும். உணவின்மீது வெறுப்பு உண்டாகும். சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாது. உடல் உறுப்பு களின் இயக்கமானது குறைய ஆரம்பிக்கும். இவையெல்லாம், முதுமையின் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்களே.

இதை உணர்ந்து அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றையெல்லாம் கடைப்பிடித்து கடைசிவரை நிம்மதியாக இருக்க வேண்டும்.

மாலை வெயிலும் எண்ணெய்க் குளியலும்!

வைட்டமின் டி குறைவாக இருப்பவர்கள், காலை அல்லது மாலை நேர நிற வெயிலில் உலவுவது நல்லது. வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறும், இரு மூட்டுகளிடையே வழுவழுப்புத்தன்மை அதிகரிக்கவும் உதவும்.

தக்காளி, பசும்பால், கீரைகள், பேரீச்சம்பழம், மீன், இறைச்சி ஆட்டு எலும்பு சூப், பிரண்டைத் துவையல் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

உடல் உழைப்போ உடற் பயிற்சியோ செய்வதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆக்ஸிஜன் பரவல் நடைபெறும். அது ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

எலும்பு வீக்கம், உராய்வு, முறிவு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்ய ஆயுர்வேத மருத்துவத்தில் மாத்திரைகளும் தைலங்களும் உள்ளன. உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்

மெனோபாஸ் என்பது இயற்கை யின் சுழற்சியில் ஒன்று. அதாவது, பல பருவங்களைக் கடந்து வயது முதிர்வது போலவே, உடலில் பல்வேறு மாற்றங்களைக் கடந்து வரும் மற்றுமொரு மாற்றமே மெனோபாஸ்.

இதை எதார்த்தமாக எதிர்கொள்ள வேண்டும். இதை ஒரு பிரச்னையாக மனதில் ஏற்றிக்கொள்ளாமல், கடக்க வேண்டும். அதேசமயம், இந்த மாற்றத்தை நம் உடல் தாங்குவதற்கு ஏற்றவகையிலான ஏற்பாடுகளைச் செய்யத் தவறக் கூடாது’’ - எச்சரிக்கை யுடன் முடிக்கிறார் மருத்துவர் எஸ்.சௌரிராஜன்.