Published:Updated:

கொரோனா: `கான்டாக்ட் ட்ரேஸிங்கில் செய்த தவறுகளே காரணம்’ - உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், 'கான்டாக்ட் ட்ரேஸிங்', நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. நோய் பரவாமல் தடுப்பதே இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்று.

சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கோவிட்-19 வைரஸ், உலகம் முழுக்கப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தியாவில் நோய் பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது.

கான்டாக்ட் ட்ரேஸிங்
கான்டாக்ட் ட்ரேஸிங்

நோய் பரவலைத் தடுக்க, பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக நாடுகள் 'கான்டாக்ட் ட்ரேஸிங் (contact tracing)'ல் செய்த தவறுகளே இந்த நிலைக்குக் காரணம் என்றும், வரும் காலங்களில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சாக்குக் கூறாமல், கூடுதல் முனைப்புடன் அதை நடைமுறைப்படுத்தி, நோய் பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதனாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து டெட்ரோஸ், "நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது வருத்தமளிக்கிறது. உலகின் பல இடங்களில் கொரோனா வைரஸ் தற்போது மிகவும் தீவிரமாகப் பரவிவருகிறது. ஏராளமான உயிர்ச் சேதங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்திவரும் கொரோனாவின் முழு தீவிரத் தாக்குதலை உலகம் இனிமேல்தான் எதிர்கொள்ளவிருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் 'கான்டாக்ட் ட்ரேஸிங்', நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. நோய் பரவாமல் தடுப்பதே இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்று. அதற்கு நாம் கான்டாக்ட் ட்ரேஸிங் முறையைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும்.

கொரோனா
கொரோனா
Pixabay

ஆனால், நோய் பாதிப்பு அதிகமுள்ள பெரும்பாலான நாடுகள் அதை முறையாக மேற்கொள்ளாமல், மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் இந்தப் பேரிடர் நிலையிலிருந்து மீண்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப விரும்புகிறோம். ஆனால், எண்ணத்துக்கேற்ற செயல்பாடுகள் நம்மிடம் ஒருபோதும் காணப்படுவதில்லை. இன்னமும், மக்கள் நோய்த்தொற்றுக்கு எளிதில் ஆளாகும் விதத்தில் அஜாக்கிரதையாக இருந்துவருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

கடந்த முறை, எபோலா நோய் பாதிப்பு நேரத்தில் காங்கோ நாட்டின் குக்கிராமங்களில்கூட ஒரு நாளைக்கு 25,000 வரை ட்ரேஸிங் செய்ய முடிந்தது. 'ஆனால், தற்போது அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் சிரமமான காரியம்' என்று வாதிடுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு