Published:Updated:

மோமோஸை விரும்பி உண்பவரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்துகள்... ஆய்வில் அதிர்ச்சி!

மோமோஸ்

தற்போது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக உள்ளது மோமோஸ். ``இதை உண்பது ஆரோக்கியத்தை சீர்குலைப்பதோடு, நீண்ட கால உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும்", என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

மோமோஸை விரும்பி உண்பவரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்துகள்... ஆய்வில் அதிர்ச்சி!

தற்போது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக உள்ளது மோமோஸ். ``இதை உண்பது ஆரோக்கியத்தை சீர்குலைப்பதோடு, நீண்ட கால உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும்", என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

Published:Updated:
மோமோஸ்

உணவுப் பிரியர்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபலமானது மோமோஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இதனை விரும்பி உண்கின்றனர். ஆவியில் வேகவைத்தது, எண்ணெயில் பொறித்தது என பலவிதங்களில் மோமோஸ் தயாரிக்கப்படுகிறது. அதோடு அதில் இறைச்சி, மீன், காய்கறி என சைவம் மற்றும் அசைவ சுவைகளில் தயார் செய்யப்படுகிறது. இதற்கு தொட்டுக்கொள்ள மசாலா கலந்த காரமான சாஸ் அல்லது தக்காளி கெட்சப் கொடுக்கப்படுகிறது.

Veg Momos
Veg Momos

இப்படி, அனைத்து வயதினராலும் விரும்பி உண்ணப்படும் மோமோஸ், நமது உடலில் பல வகையான நோய்களுக்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறுகையில், ``மோமோஸின் பூர்வீகம் திபெத். தற்போது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக உள்ளது. ஆனால் மோமோஸ் உண்பது ஆரோக்கியத்தை சீர்குலைப்பதோடு, நீண்டகால உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும்" என்கின்றனர். மோமோஸை ஏன் உண்ணக்கூடாது என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர். `பெரும்பாலானா சாலையோர உணவகங்கள், சுகாதாரம் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே அத்தகைய உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோமோஸ் மறுசுத்திகரிப்பு செய்யப்பட்ட மாவினால் (மைதா) தயாரிக்கப்படும் உணவு. சுத்திகரிக்கப்பட்ட மாவில் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மூன்று சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கிறது அமெரிக்காவின் விவசாயம், சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை.

முதலாவதாக, சுத்திகரிக்கப்பட்ட மாவை அதிகம் உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலினின் அளவு அதிகரிக்கும். இதனால் வளர்சிதை மாற்ற செயலிழப்பு ஏற்படுகிறது. இரண்டாவதாக, ஆரோக்கியமான உணவுகளுக்கு பதில் இந்த மைதா உணவை உட்கொள்வதன் மூலம், உடலில் மாவுச்சத்து கூடுகிறது. நார்ச்சத்து குறைகிறது. இது காலப்போக்கில், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதற்கு காரணம் மாவு சுத்திகரிக்கப்படும் போது அதில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து இழக்கப்படுகிறது. இது ஒருகட்டத்தில் உடல் எடை அதிகரித்தல், ஹைப்பர்டென்ஷன் மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு வழிவகுக்கிறது.

உடல் எடை
உடல் எடை

மூன்றாவதாக, சுகாதாரக் குறைபாட்டால் நோய்கள் ஏற்படுகின்றன. மோமோஸுக்குள் வைக்கப்படும் இறைச்சி போன்றவை கெட்டுப்போனதாக இருக்கும்பட்சத்தில், E.coli பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் உருவாகின்றன. இந்த உணவை உட்கொள்ளும்போது, சிறுநீர் உபாதைகள், இரைப்பை குடல் அழற்சி, வாந்தி ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. ஒருகட்டத்தில் இது உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆபத்தாகிறது.

மேலும் மோமோஸுடன் தொட்டுக்கொள்ளக் கொடுக்கப்படும் கெட்சப்புகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும்பட்சத்தில், மூல நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம். மோமோஸில் மோனோ-சோடியம் குளுட்டமேட் (MSG) இருக்க வாய்ப்புள்ளது, இது உடல் பருமனுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், நரம்பியல் பிரச்னைகள் , வியர்வை, மார்பு வலி , குமட்டல் மற்றும் படபடப்பு போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது" என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.