Published:Updated:

மகப்பேறு, குழந்தைநலம், பாலியல்... `பெண்கள் அதிகம் விரும்புவது ஆன்லைன் ஆலோசனையே!'- ஆய்வு முடிவு

பெண்கள்
பெண்கள்

சென்னையில் இயங்கும் ப்ராக்ட்டோ நிறுவனம், ஆன்லைனில் தங்களைத் தொடர்பு கொள்பவர்களைப் பற்றி பொது ஆய்வு ஒன்றை நடத்தியது.

மருத்துவர்களை ஆன்லைனில் தொடர்புகொள்வதற்கும், மருத்துவர்களின் அப்பாயின்ட்மென்ட்டைப் பெற்றுத் தருவதற்கும் பெருநகரங்களில் கன்சல்டன்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்படி சென்னையில் இயங்கும் ஒரு நிறுவனம், ப்ராக்ட்டோ.

இந்நிறுவனம், ஆன்லைனில் தங்களைத் தொடர்பு கொள்பவர்களைப் பற்றி பொது ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில், மருத்துவர்களிடம் அப்பாயின்மென்ட் பெற்று நேரில் சென்று சந்திப்பதைவிட, ஆன்லைனில் ஆலோசனை பெறுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

பெண்கள்
பெண்கள்

கடந்த ஆண்டில் இந்தச் சேவையைப் பயன்படுத்திய 7 கோடி பெண் பயனாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஆன்லைனிலேயே மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. நகரங்கள் மட்டுமன்றி போக்குவரத்து வசதி குறைந்த கிராமப்பகுதிகளிலும் இந்த இணைய கன்சல்டன்சி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் இந்த ஆய்வுமுடிவு தெரிவிக்கிறது.

மகப்பேறு மருத்துவரிடம் செல்வதற்கு முன்பு பெண்கள் அறிய வேண்டிய 10 தகவல்கள்!

அந்த வகையில் கன்சல்டன்சியை அணுகி மருத்துவ ஆலோசனை பெறும் பெண்களில் இளம் பெண்கள் மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் அதிகம் பெற்றிருக்கின்றனர். அவர்கள் மாதவிடாய் பிரச்னை, கர்ப்பகாலம், கர்ப்பப்பை, பாதுகாப்பற்ற உடலுறவு குறித்த ஆலோசனைகள் பெற்றுள்ளனர்.

அதேபோல, 40 வயதில் உள்ள பெண்கள் இரவு 10 மணியளவிலிருந்து அதிகாலை வரையிலும் குழந்தைகள்நல மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். இருமல், சளி, தடுப்பூசிகள் குறித்த தெளிவைப் பெறுவதற்கான ஆலோசனைகளை மருத்துவர்களிடம் பெற்றுள்ளனர். அடுத்து, 40-ஐத் தாண்டிய பெண்கள் மதியவேளைகளில் எலும்பியல் நிபுணர்களிடம் ஆன்லைன் ஆலோசனை பெற்றிருக்கிறார்கள். முழங்கால்வலி, முதுகுவலி, உடல் காயங்கள், கீல்வாதம் உள்ளிட்டவை குறித்தெல்லாம் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர்.

பெண்கள்
பெண்கள்
ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

இந்தப் பெண்கள் பொது மருத்துவரைவிட மகப்பேறு மருத்துவர்களிடம்தான் அதிகமாக ஆன்லைனில் ஆலோசித்துள்ளனர், அது 30 சதவிகிதம் என்கிறது, ஆய்வு. பொது மருத்துவரை 18 சதவிகிதம் பேர் ஆன்லைனிலேயே அணுகியுள்ளனர்.

சருமநோய் மருத்துவரை 15 சதவிகிதம் பேரும், மனநல மருத்துவரை 6 சதவிகிதம் பேரும், குழந்தைகள்நல மருத்துவரை 5 சதவிகிதத்தினரும் அணுகி ஆன்லைன் ஆலோசனை பெற்றுள்ளனர். மேலும், பாலியல் மருத்துவர், பல் மருத்துவர், நுரையீரல் நிபுணர் ஆகியோரிடமும் பெண்கள் அதிகம் ஆலோசனை பெற்றுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு